ரஷ்யா உடனான போரில் அமெரிக்க ராணுவ தளவாடங்களை பயன்படுத்த உக்ரைனுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நேற்று அனுமதியளித்தார்.
இதனையடுத்து ரஷ்யாவுக்குள் நீண்டதூரம் சென்று தாக்கும் அமெரிக்க ஏவுகணைகளை வீசித் தாக்குதல் நடத்த உக்ரைன் ஆயத்தமாகி வருகிறது.
இந்நிலையில் ரஷ்யா மீது மரபு சார்ந்த நீண்டதூர ஏவுகணைகள் கொண்டு தாக்குதல் நடத்தினால் பதிலுக்கு அணு ஆயுதத்தை பயன்படுத்த ரஷ்யா திட்டமிட்டுள்ளது.
அணுஆயுதம் வைத்திருக்கும் நாட்டின் ராணுவ தளவாடங்கள் தங்கள் நாட்டின் மீது தாக்குதல் நடத்தினால் அந்நாட்டின் மீது ரஷ்யா அணு ஆயுதத்தை பயன்படுத்தும் என்று ரஷ்ய அதிபர் புடின் இன்று எச்சரித்துள்ளார்.
அணு ஆயுத பயன்பாடு குறித்த புடினின் இந்த புதிய கொள்கை உக்ரைன் – ரஷ்யா இடையிலான போரில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.