சென்னை:  ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் என்கவுண்டர் செய்யப்பட்ட பிரபல ரவுடி சீசிங் ராஜாவின் சென்னை வீடு உள்பட அவருக்கு நெருக்கமானவர்களின் வீடுகள் உள்பட 14 இடங்களில் காவல் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவராக இருந்து வந்த ஆம்ஸ்ட்ராங் ஒரு கும்பலால் ஜூலை 5ந்தேதி மாலை அவரதுவீடு அருகே பெரம்பூரில் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டார். இதை கொலையில் 20க்கும் மேற்பட்டோரை காவல்துறை கைதுசெய்தநிலையில்,   இந்த கொலை சம்பவத்தில் முக்கிய குற்றவாளயின  ஆந்திராவில் பதுங்கியிருந்த சீசிங் ராஜாவை கைது செய்து சென்னை அழைத்து வந்தனர். பின்னர், அவரை காவல்துறையினர் என்கவுண்டர் சய்தனர்.  இதில் அவர் உயிரிழந்தார்.

இந்த நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பாக கூலிப்படைகளுக்கு பணப் பரிமாற்றம் செய்யப்பட்டது தொடர்பாக சீசிங் ராஜா தொடர்புடைய இடங்களில் வருமானவரித்துறை, போலீசார் சோதனை மேற்கொள்வதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த சோதனையானது சீசிங் ராஜாவிற்கு நெருக்கமானவர்கள் மற்றும் தொடர்புடையவர் உள்ள இடங்களில் நடைபெற்று வருவதாக  கூறப்படுகிறது.

. அதன் அடிப்படையில் சென்னை, தாம்பரம் அடுத்த சேலையூர் பகுதியில் உள்ள அவரது வீட்டில் காவல்துறையினர் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள், பள்ளிக்கரணை துணை ஆணையர் கார்த்திகேயன் தலைமையில் 100க்கும் மேற்பட்ட போலீசார் 1 14 இடத்தில் சோதனை செய்து வருகின்றனர். மேலும் நீதிமன்ற உத்தரவின் பெயரில் இந்த சோதனை நடத்தப்படுவதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 ஆற்காடு சுரேஷின் நண்பரான சீசிங் ராஜா மீது 5 கொலை வழக்குகள் உட்பட 32 வழக்குகள் பதிவாகி நிலுவையில் இருந்த நிலையில், 5 முறை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்த சூழ்நிலையில், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில்  சீசிங் ராஜா, கடந்த செப்டம்பர் 23ஆம் தேதி போலீசாரால் என்கவுன்டரில் கொலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.