ஓராண்டுக்கும் மேல் வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூர் மாநிலத்தில் திடீர் அரசியல் மாற்றமாக பாஜக கூட்டணியில் இருந்து கான்ராட் சங்மாவின் தேசிய மக்கள் கட்சி (என்பிபி) வெளியேறுவதாக அறிவித்துள்ளது.
இதுகுறித்து தேசிய மக்கள் கட்சி பாஜக தலைவர் ஜேபி நட்டாவுக்கு எழுதிய கடிதத்தில் மணிப்பூர் மாநிலத்தில் தற்போது நிலவும் சட்டம் ஒழுங்கு நிலைமை குறித்து கவலை தெரிவித்துள்ளது.
கடந்த சில நாட்களாக, நிலைமை மோசமாகி வருவதையும், ஏராளமான அப்பாவி மக்கள் உயிரிழப்பதையும், மாநில மக்கள் பெரும் இன்னல்களுக்கு ஆளாவதையும் சுட்டிக்காட்டியுள்ள என்பிபி பிரேன் சிங் தலைமையிலான அரசுக்கு அளித்துவரும் ஆதரவை உடனடியாக விலக்கிக் கொள்ள முடிவு செய்துள்ளது.
முதல்வர் பிரேன் சிங் தலைமையிலான மணிப்பூர் மாநில அரசு நெருக்கடியைத் தீர்க்கவும், இயல்பு நிலையை மீட்டெடுக்கவும் முற்றிலும் தவறிவிட்டதாக அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இருந்தபோதும் NPPயின் இந்த அறிவிப்பு பாஜக ஆட்சிக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என்று கூறப்படுகிறது.
60 உறுப்பினர்களை கொண்ட மணிப்பூர் சட்டமன்றத்தில் பாஜக-வுக்கு 37 உறுப்பினர்கள் உள்ளனர் தவிர NPP கட்சிக்கு 7 உறுப்பினர்கள் மட்டுமே உள்ளனர் எனபது குறிப்பிடத்தக்கது.