சென்னை; தாம்பரம் பணிமனையில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் நாளை (நவம்பர் 17 ஆம் தேதி) காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
சென்னையில் இயக்கப்பட்டு வரும் புறநகர் மின்சார ரயில்கள் மூலம் தினசரி பல லட்சம் பயணம் செய்து வருகின்றனர். புறநகர் பகுதிகளில் இருந்து நகருக்குள் பணி நிமித்தமாக வர மின்சார ரயில்கள் பேருதவி புரிந்து வருகின்றது.
இதனால், ரயில் நிலையம் மற்றும் தண்டவாள பராமரிப்பு பணிகள் காரணமாக அவ்வப்போது சில ரயில் சேவைகள் தற்காலிகாகமாக, அதாவது விடுமுறை தினங்களில் ரத்து செய்யப்படுவதும், மாற்றுவழியில் இயக்கப்படும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், தாம்பரம் ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால், நாளை ஒருநாள் கடற்கரை தாம்பரம் இடையே இயக்கப்படும் மின்சார ரயில் சேவை ரத்து சய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நவம்பர் 17 ஆம் தேதி தாம்பரம் பணிமனையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதனால் “சென்னை கடற்கரையிலிருந்து புறப்பட்டு செல்லும் பல மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது.
அதன்படி, சென்னை கடற்கரை – தாம்பரம், தாம்பரம் – சென்னை கடற்கரை இடையே மின்சார ரயில் சேவை காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாகவும், இந்த நேரத்தில் கடற்கரை-பல்லாவரம் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் எனவும் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
அதே நேரத்தில், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருமால்பூர், அரக்கோணம் செல்லும் ரயில்கள் அட்டவணைப்படி இயங்கவுள்ளது.
எனவே, இந்த மாற்றத்திற்கு ஏற்ப பயணிகள் தங்களின் பயணத்தை திட்டமிட்டுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.