நெல்லை: திருநெல்வேலி பாளையங்கோட்டை அருகே உள்ள மேலப்பாளையத்தில் அமரன் திரைப்படம் ஒடிக்கொண்டிருந்த திரையரங்கு வளாகத்தில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசினர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

தமிழ்நாட்டைச் சேர்ந்த ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜனின் நிஜ வாழ்க்கை யைப் பறைசாற்றும் படம் தான் ‘அமரன்’. இந்த படத்தின் கதாநாயகனாக சிவகார்த்திகேயன், கதாநாயகியாக சாய் பல்லவி நடித்துள்ளனர். இந்த படம் தமிழக மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த படத்தில் இஸ்லாமிய பயங்கரவாதிகள் கொல்லப்படுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இதற்கு தமிழ்நாட்டில் உள்ள சில இஸ்லாமிய அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருவதுடன், மிரட்டல்களும் விடுத்து வருகின்றனர். இதன்மீது தமிழ்நாடு முறையான நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தி வருகிறது.

இந்த நிலையில், நெல்லை அருகே மேலப்பாளையத்தில் உள்ள தியேட்டர் ஒன்றில் அமரன் படம் வெளியாகி ஒடிக்கொண்டிருக்கிறது. நேற்றும் வழக்கம்போல தியேட்டரில் படம் ஒடிக்கொண்டிருந்த நிலையில், திரையரங்கு வளாகத்தில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசியுள்ளனர்.

இந்த விவகாரத்தில் யாருக்கும் எந்தவித பாதிப்பும் இல்லை. தியேட்டர் அதிபரையும், பொதுமக்களையும் மிரட்டும் வகையில், இஸ்லாமிய பயங்கரவாத ஆதரவாகர்ள இந்த பெட்ரோல் குண்டுகளை வீசியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

இதுகுறித்து மேலப்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்து அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.