தஞ்சை
தஞ்சை பெரிய கோவிலில் ஐப்பசி பௌர்ணமியை முன்னிட்டு 1000 கிலோ அன்னம் மற்றும் 500 கிலோ காய்கறிகல் மற்றும் கனிகளால் அபிஷேகம் நடந்துள்ளது
ஆண்டு தோறும் ஐப்பசி மாத பௌர்ணமி அன்று அனைத்து சிவன் கோவில்களிலும் அன்னாபிஷேகம் நடைபெறும், ஆயினும் உலகிலேயே மிகப் பெரிய சிவலிங்கமான தஞ்சை பெரிய கோவிலில் இருக்கும் ஆவுடையாருக்கும் நடத்தப்படும் அன்னாபிஷேகம் தனிச்சிறப்பு வாய்ந்தது ஆகும்.
தஞ்சை பெரிய கோவில் என அழைக்கப்படும் தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் திருக்கோயின் மூலவரான பெரிய ஆவுடையார் சுமார் பதிமூன்று அடி உயரமும், அறுபத்து மூன்று அடி சுற்றளவும் கொண்ட ஒரே கல்லால் ஆன மிகப் பெரிய சிவலிங்கமாக உள்ளது. இந்த லிங்கம் தான் உலகிலேயே மிகப் பெரிய சிவலிங்கமாகும்.
ஆண்டுதோறும் ஐப்பசி மாத பெளர்ணமி அன்னாபிஷேகத்தின் போது இந்த லிங்கத்தை மூழ்கடிக்கும் அளவிற்கு அன்னம் செய்து, அதனை அன்னாபிஷேகமாகச் செய்வது வழக்கம்.
இந்த வருடம் ஐப்பசி மாத பௌர்ணமியை முன்னிட்டு தஞ்சை பெரிய கோவிலில் பெரிய ஆவுடையாருக்கு 1000 கிலோ அன்னம் மற்றும் 500 கிலோ காய்கறிகள் மற்றும் கனி வகைகளால் அபிஷேகம் நடந்துள்ளது. இதை ஏராளமான பக்தர்கள் தரிசித்துள்ளனர்.