மலேசியர்களை திருமணம் செய்துகொண்ட வெளிநாட்டினரை வேலைக்கு அனுமதிப்பது குறித்து அந்நாட்டு அரசு ஆலோசித்து வருவதாகக் கூறப்படுகிறது.

மலேசியர்களின் வெளிநாட்டு வாழ்க்கைத் துணைக்கு அந்நாட்டில் தங்கியிருக்க நீண்டகால விசா மட்டுமே வழங்கப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கு வேலைக்கான விசா மறுக்கப்பட்டு வந்தது.

மாறாக குறிப்பிட்ட சில விதிமுறைகளை பூர்த்தி செய்யும் நபர்கள் குறிப்பிட்ட வேலைகளில் மட்டும் அங்கு பணிபுரிய அனுமதி வழங்கப்படுகிறது.

இந்த நிலையில் நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்ற புலம்பெயர்ந்த வெளிநாட்டு தொழிலாளர்களை நம்பி இருப்பதைத் தவிர்க்க அந்நாட்டு அரசு தீர்மானித்துள்ளது என்று மலேசிய உள்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ சைஃப்டின் நாசூத்தியோன் தெரிவித்துள்ளார்.

மேலும், மலேசியர்களை திருமணம் செய்துகொண்ட வெளிநாட்டினரை வேலைக்கு அனுமதிப்பது குறித்து அரசு ஆலோசித்து வருவதாகவும் கூறியுள்ளார்.