தூத்துக்குடி: பவுர்ணமி நாளையொட்டி, திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு வரும் பக்தர்கள் கடற்கரையில் தங்குவது வாடிக்கையாக வரும் நிலையில், தற்போது பெய்து வரும் மழை காரணமாக யாரும் கடற்கரைறியல் தங்க வேண்டாம்: காவல்துறை அறிவுறுத்தி உள்ளது.
பொதுவாக இந்து கோவில்களில் பவுர்ணமி, அமாவாசை தினங்கள் சிறப்பு பூஜைகள் நடைபெறும். இதையொட்டி ஏராளமான பக்தர்கள கோவிலுக்கு வந்து தரிசம் செய்வது வழக்கமானது. ஆனால், சமீப காலமாக பவுர்ணமி நாட்களில் பல கோவில்களில் பக்தர்கள் இரவு தங்கி வருகின்றனர்.
பவுர்ணமி தினத்தில் திருவண்ணாமலையில், அண்ணாமலையார் வீற்றிருக்கும் மலையை பக்தர்கள் கிரிவலாகமா சுற்றி வந்து வணங்கிச் செல்வது பல ஆண்டுகளாக தொன்றுதொட்டு வரும் நிலையில், சமீப ஆண்டுகளாக மேலும் பல இடங்களில் உள்ள மலைக்கோயில்களும், சிவன் ஆலயங்களிலும் பவுர்ணமி கிரிவலம் நடைபெற்ற வருகிறது.
பாதுகாப்பு போடப்படுவதுடன், மின்விளக்குகளும் பொருத்தப்பட்டு கண்காணிக்கப் பட்டு வருகிறது.
பவுர்ணமி அன்று முருகப்பெருமானை தரிசனம் செய்து கடற்கரையில் தங்கினால் நம் வினைகள் விலகும் என்கிறார்கள். அதற்காகத்தான் குடும்பத்தோடு வந்திருக்கிறோம். இரவு முழுவதும் இங்கே தங்கியிருந்து காலை சமுத்திரத்தில் நீராடிப் பின் புறப்படுவோம்” என்றனர். இதன் தொடர்ச்சியாக கடந்த ஆண்டுகளாக திருச்செந்தூர் முருகன் கோவிலிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. திருச்செந்தூரில் குவிந்த பக்தர்கள் சாமி தரிசனம் செய்ததோடு கடற்கரையிலேயே இரவு முழுவதும் தங்கியிருந்துவிட்டு அடுத்த நாள் அதிகாலை வீடு திரும்புகின்றனர்.
இதுபோன்ற பக்தர்களின் நம்பிக்கையினால் திருச்செந்தூரில் நாளுக்கு நாள் அங்கு குவியும் கூட்டத்தின் அளவு அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
ஆனால், தற்போது மழைக்காலம் என்பதால், தமிழ்நாடு முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. கடந்த சில நாட்களாக தென்மாவட்டங்களில் தொடர் மழை பெய்து வருகிறது. நேற்று முதல் மீண்டும் மழை பெய்கிறது. இன்றும் (பவுர்ணமி) மழை பெய்து வருகிறது.
இதனால், பக்தர்கள் கடற்கரையில் தங்க வேண்டாம் என காவல்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர். மழை மற்றும் காற்று காரணமாக கடல்நீரில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளதால், பக்தர்கள் கடற்கரையில் தக்க அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது.