சென்னை: கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை தொடர்ந்து சரிந்து வருகிறது. இன்று சரவனுக்கு ரூ.320 குறைந்து, ஒருசரவன் விலை ரூ.57 ஆயிரத்துக்கு கீழ் வந்து இருக் கிறது. 22 காரன் தங்கத்தின் இன்றைய வலை சவரன் ரூ.56 ஆயிரத்து 360-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தங்கத்தின் விலை கடந்த ஆண்டு இறுதியில் ரூ.60ஆயிரத்தை நெருங்கிய நிலையில், அமெரிக்க அதிபர் தேர்தல் வெற்றிக்கு பிறகு படிப்படியாக குறைந்து வருகிறது. கடந்த 10 நாட்களில், சவரனுக்கு ரூ.2,280 சரிந்துள்ளது.
கடந்த அக்டோபர் மாதம் 31-ந் தேதி ஒரு சவரன் ரூ.59 ஆயிரத்து 640 வரை சென்றது. இது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் பொருளாதார வல்லுநர்களும், தங்கத்தின் விலை மேலும் அதிகரிக்கும் என அச்சமூட்டினர். இதனால், சாமானிய மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த நிலையில், அமெரிக்க தேர்தலைத் தொடர்ந்து, ஏற்ற இறக்கமுடன் காணப்பட்டத் தங்கத்தின் விலை, அக்டோபர் முதல் வாரத்தில் குறையத் தொடங்கியது.
அமெரிக்க தேர்தல் முடிவுகள் கடந்த 6-ந் தேதி வெளியாகி, இதில், அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் மீண்டும் தேர்வு செய்யப்பட்டதன் எதிரொலியாக அதற்கு மறுநாள் (7-ந் தேதி) தடாலடியாக சவரனுக்கு ரூ.1,320 சரிந்து, ஒரு கிராம் ரூ.7 ஆயிரத்து 200-க்கும், ஒரு சவரன் ரூ.57 ஆயிரத்து 600-க்கும் விற்பனை ஆனது. இதைத்தொடர்ந்து தொடர்ந்து சரிவை கண்டு வருகிறது.
நேற்று முன்தினம் (11ந்தேதிஸ்ரீ) சவரனுக்கு ரூ.440 குறைந்து, ஒரு சவரன் ரூ.58 ஆயிரத்துக்கு கீழ் வந்தது. அதாவது, நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.7 ஆயிரத்து 220-க்கும், ஒரு சவரன் ரூ.57 ஆயிரத்து 760-க்கும் விற்பனை ஆனது.
இதன் தொடர்ச்சியாக நேற்றும் தங்கம் விலை நேற்றும் சரவனுக்கு ரூ.1080 குறைந்தது. நேற்றைய (நவம்பர் 12ந்தேதி) நிலவரப்படி, கிராமுக்கு ரூ.135-ம், சவரனுக்கு ரூ.1,080-ம் குறைந்து, ஒரு கிராம் ரூ.7 ஆயிரத்து 85-க்கும், ஒரு சவரன் ரூ.56 ஆயிரத்து 680-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில் இன்று சரவனுக்கு ரூ.320 குறைந்துள்ளது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.40 குறைந்து ரூ.7,045-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்து ரூ.56 ஆயிரத்து 360-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை இன்று உயர்ந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ரூ.101-க்கு விற்பனை செய்யப்படுகிறது.