கன்னியாகுமரியில் அமைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டதன் வெள்ளி விழா கொண்டாட்டம் வரும் டிசம்பர் 31 மற்றும் ஜனவரி 1 ஆகிய தேதிகளில் நடைபெறும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

1990 செப்டம்பர் மாதம் 6ம் தேதி துவக்கிய இந்த சிலை அமைக்கும் பணி 2000மாவது ஆண்டு ஜனவரி 1ம் தேதி அப்போதைய முதலமைச்சர் மு. கருணாநிதியால் திறந்துவைக்கப்பட்டது.

133 அடி உயரம் கொண்ட இந்த திருவள்ளுவர் சிலை போல கருங்கற்களால் ஆன சிலை உலகில் வேறெங்கும் கிடையாது.

2004 டிசம்பர் 24 சுனாமி மற்றும் நிலநடுக்கத்தை எந்தவித பாதிப்புமின்றி இச்சிலை எதிர்கொண்டுள்ளது.

இந்த சிலை நிறுவப்பட்டு 25 ஆண்டுகள் ஆவதை அடுத்து வரும் டிசம்பர் 31 மற்றும் ஜனவரி 1 ஆகிய தேதிகளில் திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டதன் வெள்ளி விழா கொண்டாட்டத்திற்கு தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது.