நாக்பூர்

காராஷ்டிர மக்கள் ஆட்சி மாற்றத்தை விரும்புவதாக சரத் பவார் கூறியுள்ளார்.

வரும் 20 ஆம் தேதி நடைபெற உள்ள மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் பா.ஜனதா தலைமையிலான ஆளும் மகாயுதி கூட்டணிக்கும், காங்கிரஸ், உத்தவ் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் (எஸ்.பி.) ஆகிய எதிர்க்கட்சிளின் மகாவிகாஸ் அகாடி கூட்டணிக்கும் நேரடி போட்டி நிலவுகிறது.

இந்நிலை நாக்பூர் விமான நிலையத்தில் சரத் பவார் செய்தியாளர்கள்ளிடம்,

“மகாராஷ்டிர மக்கல் ஆட்சியில் மக்கள் ஒரு மாற்றத்தை விரும்புவதாக நாங்கள் உணர்கிறோம், அவர்களுக்கு நம்பிக்கையை அளிக்க நாங்கள் உழைக்க வேண்டும். அதற்காக தீவிரமாக உழைக்கிறோம், நானும் எங்களது கூட்டணியினரும் இன்று முதல் மராட்டியம் முழுவதும் உள்ள மக்களைச் சென்றடைய உள்ளோம்

எனது கட்சியின் நிலைப்பாட்டை நான் கூறுவேன், கடந்த 3 ஆண்டுகளாக சாதிவாரி கணக்கெடுப்பு கோரி வருகிறோம். சாதிவாரி கணக்கெடுப்பின் மூலம் உண்மைகளை நாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.

முதன்மையாக, சாதிவாரி கணக்கெடுப்பு, இடஒதுக்கீடு வரம்பை அதிகரிப்பது குறித்த முடிவை எளிதாக்க உதவும் என்று தெரிகிறது. மக்கள் தொகை கணக்கெடுப்பு முடிந்த பிறகு இது தெளிவாகும். தவிர, ராகுல் காந்தி சொல்வது நடந்தால் இடஒதுக்கீட்டு சதவீதத்தையும் அதிகரிக்க வேண்டும்”  

என்று கூறியுள்ளார்.