சென்னை:  சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகம் அரங்கத்தில், சென்னை கிரான்ட் மாஸ்டர்ஸ் செஸ் தொடரில்  தமிழ்நாடு வீரர் பிரணவ் முதலிடத்தில் இருந்து வருகிறார்.

இந்த ஆண்டு . சென்னை கிரான்ட் மாஸ்டர்ஸ் செஸ் போட்டிகள் சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகம் அரங்கத்தில் நடைபெற்று வருகிறது.  மாஸ்டர்ஸ் மற்றும் சேலஞ்சர்ஸ்  என இரு பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்று வருகிறது.

சென்னை கிரான்ட் மாஸ்டர்ஸ் செஸ் தொடரின் மாஸ்டர்ஸ் மற்றும் சேலஞ்சர்ஸ் பிரிவுகளின் 2வது சுற்று போட்டிகள் நடைபெற்றது. மாஸ்டர்ஸ் பிரிவு 2 வது சுற்று ஆட்டத்தில் ஈரானை சேர்ந்த அமீன் தபேதிபாய் – செர்பியாவின் சரணா அலெக்ஸி உடன் வெள்ளை நிற காய்களுடன் மோதி தனது 44 வது நகர்வில் வெற்றி பெற்றார். அடுத்ததாக ஈரான் வீரர் மக்சூட்லூ பர்ஹாம் – இந்தியாவின் விதித் சந்தோஷ் குஜராத்தி உடன் வெள்ளை நிற காய்களுடன் விளையாடி தனது 44 வது நகர்வில் வெற்றி பெற்றார்.

இதில் இந்தியர்களுக்கான சேலஞ்சர்ஸ் பிரிவின் 2 வது சுற்று போட்டிகளை பொறுத்தவரை, தமிழ்நாடு வீரர்கள் பிரனேஷ், கார்த்திகேயன் முரளி இடையேயான போட்டி மற்றும் தமிழ்நாட்டின் வைஷாலி மற்றும் இந்திய வீரர் ரௌனக் சத்வானி இடையேயான போட்டி சமனில் முடிந்தது.  கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் தொடரின் மாஸ்டர்ஸ் 2 வது சுற்று போட்டியின் முடிவில் புள்ளிப் பட்டியலில் 3 மற்றும் 4 வது இடத்தில் தொடரும் இந்திய வீரர்கள் அர்ஜுன், அரவிந்த் உள்ளனர்.

அதே சமயம் இந்தியாவின் அபிமன்யு புரானிக்-ஐ, தமிழ்நாடு வீரர் பிரணவ் கருப்பு காய்களுடன் ஆடி, தனது 49 வது நகர்வில் வீழ்த்தினார். அதே போல மற்றொரு போட்டியில், ஹரிகா துரோணவள்ளி, லியோன் லுகே மெண்டான்கா உடனான போட்டியில் தோல்வியை தழுவினார்.

லியோன் லுகே மெண்டான்கா வெள்ளை காய்களுடன் விளையாடி 44 வது நகர்வில் ஹரிகாவை வீழ்த்தினார். எனவே, சேலஞ்சர்ஸ் 2 வது சுற்றின் முடிவில், தமிழ்நாடு வீரர் பிரணவ் 2.0 புள்ளிகள் உடன் முதல் இடத்திலும், லியோன் லுகே மெண்டான்கா 2.0 புள்ளிகள் உடன் இரண்டாவது இடத்திலும், ரௌனக் சத்வானி 1.5 புள்ளிகள் உடன் 3 வது இடத்திலும் உள்ளனர்.

முன்னணி வீராங்கனையாக உள்ள வைஷாலி ரமேஷ் பாபு 0.5 புள்ளிகள் உடன் 5 வது இடத்திலும், ஹரிகா துரோணவள்ளி 2 சுற்றுகளிலும் ஒரு வெற்றி கூட பதிவு செய்யாமல் 0 புள்ளிகள் உடன் கடைசி இடத்தில் தொடர்கிறார்.