வாஷிங்டன்:  அமெரிக்க அதிபர் தேர்தலில் முன்னாள் அதிபர் டோனால்டு டிரம்ப் மீண்டும்  வெற்றி பெற்றுள்ளார். இதன் காரணமாக,  அவர் மீண்டும்   அமெரிக்க அதிபராக பதவி ஏற்க உள்ளார். அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

‘அசாதாரண கௌரவத்திற்காக அமெரிக்க மக்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்’, “இது நம் நாடு இதுவரை கண்டிராத அரசியல் வெற்றி, இது போன்ற எதுவும் இல்லை. எனது ஆட்சி காலம்  அமெரிக்காவின் பொற்காலமாக இருக்கும் என்று டிரம்ப் தெரிவித்துள்ளார்.

உலகமே எதிர்பார்த்த அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில், குடியரசு கட்சி சார்பில் களமிறங்கிய முன்னாள்அதிபர் டொனால்டு டிரம்ப், எதிர்த்து போட்டியிட்ட ஜனநாயக கட்சி வேட்பாளரான துணைஅதிபர் கமலாஹாரிசை தோற்கடித்து வெற்றி பெற்றுள்ளார்.  டிரம்ப் 267  வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். கமலா ஹாரிஸ் 224 வாக்குகள் பெற்று தோல்வியை சந்தித்து உள்ளார்.  இதையடுத்து அமெரிக்காவின் 47 அதிபராக  டிரம்ப்விரைவில் பதவி ஏற்க உள்ளார்.

ஏற்கனவே  கடந்த 2016 தேர்தலில் வெற்றி பெற்று அதிபரான டிரம்ப் அதற்கு அடுத்த 2020 தேர்தலில் தோல்வியை தழுவினார். இந்நிலையில் மூன்றாம் முறை மீண்டும் வென்று டிரம்ப் புதிய சாதனை படைத்துள்ளார். இதனால் வெள்ளை மாளிகை மீண்டும் டிரம்ப் வசம் வருவதால் குடியரசு கட்சியினர் கொண்டாட்டங்களில் இறங்கியுள்ளனர்.

முன்னதாக, அதிபர் போட்டிக்கான களத்தில்,  ஜனநாயகக் கட்சி சார்பில் வேட்பாளராக தற்போதைய துணை ஜனாதிபதியான இந்தியாவைச் சேர்ந்த தமிழக வம்சாவளியினரான கமலா ஹாரிஸ்   களமிறக்கப்பட்டார். அவரை எதிர்த்து, குடியரசு கட்சியின் வேட்பாளராக  முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப்  மீண்டும் களமிறங்கினார்.  இவர்களுக்கு  இடையேதான் கடுமையான  போட்டி நிலவியது.  கருத்து கணிப்புகளும் கமலா ஹாரிஸ் வெற்றிபெறவே வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது. இதனால் கமலா  ஹாரிஸ் உற்சாகத்துடன் தேர்தல் களத்தில் காணப்பட்டார். இதற்கிடையில் டிரம்ப் மீது சில தாக்குதல்கள் நடைபெற்றன. இருந்தாலும் தேர்தல் பிரசாரம் அனல் பறந்த நிலையில், அதைத்தொடர்ந்து, வாக்குப்பதிவு நடைபெற்று வாக்கு எண்ணிக்கை  நடந்துவந்து.

இந்திய நேரப்படி நேற்று (நவம்பர் 5ந்தேதி)  மாலை 5.30 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு இன்று  (நவம்பர் 6ந்தேதி) அதிகாலை 5.30 மணிக்கு நிறைவடைந்தது. வாக்குப்பதிவு முடிந்த உடனேயே வாக்குகள் எண்ணும் பணி தொடங்கின.

மொத்தம் உள்ள 538 எலக்டோரல் வாக்குகளில் வெற்றிக்கு 270 க்கு மேல் பெறுபவர்கள் வெற்றி பெறுவார்கள் என  நிலையில் கருத்துக்கணிப்புகளை பொய்யாக்கி வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப் முன்னிலை வகித்து வந்தார்.

கமலா ஹாரிஸ் 226 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளார். இருந்தாலும் முக்கிய நகரங்களான வாஷிங்டன், நியூயார்க் நகரங்களில் கமலா ஹாரிஸ்  வெற்றி பெற்றுள்ளார். டோனால்டு டிரம்ப தற்போது 277 இடங்கள் வரை வெற்றி பெற்றுள்ளார் இதன் மூலம் அதிபர் தேர்தலில் டிரம்ப்பின் வெற்றி உறுதிசெய்யப்பட்டுள்ளது.அதன்படி அமெரிக்காவின் 47-வது அதிபராக டொனால்டு டிரம்ப் பதவியேற்க உள்ளார்.

இதையடுத்து தனது ஆதரவாளர்களிடையே பேசிய டிரம்ப், தனக்கு  ‘அசாதாரண கௌரவம் வழங்கிய  அமெரிக்க மக்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்’ என்று டிரம்ப் கூறினார்.

மேலும்,  “இது நம் நாடு இதுவரை கண்டிராத அரசியல் வெற்றி, இது போன்ற எதுவும் இல்லை. உங்கள் 47 வது ஜனாதிபதி மற்றும் உங்கள் 45 வது ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட அசாதாரண மரியாதைக்காக அமெரிக்க மக்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். ஒவ்வொரு குடிமகனும், உங்களுக்காக, உங்களுக்காக போராடுவேன். குடும்பம் மற்றும் உங்கள் எதிர்காலத்திற்காக, ஒவ்வொரு நாளும் நான் உங்களுக்காக போராடுவேன் அமெரிக்காவின் பொற்காலமாக இருக்கும்.”  ‘நாங்கள் வரலாற்றை உருவாக்கினோம், அமெரிக்கர்களுக்கு ஒரு அற்புதமான வெற்றி’ என்று டிரம்ப் தனது வெற்றி உரையில்  கூறினார்.