அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் 230 ஹாரிஸ் 210ல் முன்னிலை பெற்றுள்ளனர்.
இந்த முறை டிரம்ப் 51% வாக்குகளை இதுவரை பெற்றுள்ளார், இது அவர் கடந்த முறை பெற்ற வாக்குகளை விட அதிகம்.
அதேவேளையில் கமலா ஹாரிஸ் 47% வாக்குகளை பெற்றுள்ளார்.
மொத்தமுள்ள 50 மாகாணங்களில் 31 இடங்களில் டிரம்ப் முன்னிலை பெற்றுள்ளார் தவிர, முக்கிய மாகாணமான வட கரோலினா-வில் டிரம்ப் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில அமெரிக்க அதிபர் தேர்தல் உலகம் முழுவதும் கவனத்தை ஈர்த்துள்ள நிலையில் இந்த ஆண்டு நடைபெறும் தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள் அல்லது அமெரிக்க அதிபராக யார் வரவேண்டும் என்பதில் மற்ற நாட்டு மக்களே அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று முடிவடைந்த நிலையில் அதன் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.
குடியரசு கட்சி வேட்பாளரும் முன்னாள் அதிபருமான டொனால்ட் டிரம்ப் மற்றும் ஜனநாயகக் கட்சி வேட்பாளரும் தற்போதைய துணை அதிபருமான கமலா ஹாரிஸ் இடையே முக்கிய போட்டி நிலவுகிறது.
50 மாகாணங்களில் மொத்தமுள்ள 538 உறுப்பினர்களின் வாக்குகளில் 270 வாக்குகளை பெறும் வேட்பாளரே வெற்றிபெறுவார் என்பதால் இதைப் பெற இரு கட்சி வேட்பாளர்கள் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
இதில் பெரும்பாலான மாகாணங்கள் தாங்கள் வழக்கமாக வாக்களிக்கும் கட்சிக்கு வாக்களிப்பதை வழிவழியாக கடைப்பிடித்து வரும் நிலையில் விஸ்கான்சின், மிச்சிகன், பென்சில்வேனியா, நெவாடா, அரிசோனா, வட கரோலினா, ஜார்ஜியா ஆகிய 7 மாநிலங்களே வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் மாநிலங்களாகக் கருதப்படுகிறது.
இந்த மாகாணங்கள் தங்கள் வாக்குகளை மாறி மாறி வாக்களிப்பதை நடைமுறையாகக் கொண்டிருப்பதால் இந்தமுறை யார் இந்த வாக்குகளைப் பெறுவார்கள் என்பது கேள்விக்குறியாகி உள்ளது.
இந்த நிலையில், வட கரோலினா மாகாணத்தில் டிரம்ப் வெற்றி பெற்றிருப்பது குடியரசு கட்சியினர் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.