வாஷிங்டன்

ன்று அமெரிக்கவின் அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

அமெரிக்காவின் அதிபர் தேர்தல் 4 ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறுவது வழக்கமாகும். அதிபர் ஜோ பைட்டனின் பதவி காலம் வருகிற 2025-ம் ஆண்டு ஜனவரி மாதத்துடன் முடிவடைவதால்  அமெரிக்கஅதிஅபர் தேர்தலுக்கான ஏற்பாடுகள் இந்த ஆண்டு தொடக்கத்திலேயே தொடங்கிவிட்டன. அமெரிக்க சட்டப்படி நவம்பர் மாதம் பிறந்து முதல் செவ்வாய்க்கிழமை அன்று தேர்தல் நடைபெறும்

அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபர் ஜோ பைடன், ஜனநாயக கட்சி சார்பில் தானே போட்டியிடுவதாக அறிவித்தார்.குடி0யரசு கட்சி வேட்பாளராக முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் களம் இறங்கினார்.

ஜோபைடன் வயோதிகம் காரணமாக போட்டியில் இருந்து விலகி தனது கட்சி சார்பில் தற்போதைய துணை அதிபர் கமலா ஹாரிஸ் போட்டியிடுவார் என்று அறிவித்ததன்படி அவரும் களத்தில் குதித்தார்.

அமெரிக்க மக்கள் தங்கள் ஜனாதிபதியை நேரடியாக தேர்ந்து எடுப்பதில்லை. மாகாணங்களில் மக்கள் அளிக்கும் ஓட்டுகள் கணக்கிடப்பட்டு தேர்வுக்குழு உறுப்பினர்கள் வாயிலாக (எலெக்ட்ரோல் காலேஜ்) ஜனாதிபதி தேர்வு செய்யப்படுவார்.