திருப்பரங்குன்றம்
நாதக ஒருங்கிணைப்பாளர் சீமானை தேமுதிக பொதுச் செயலர் பிரேமலதா விஜயகாந்த் கடுமையாக விமர்சித்துள்ளார்.

நேற்று திருப்பரங்குன்றத்தில் நடந்த தே.மு.தி.க. தேர்தல் பணிக்குழு செயலாளர் அழகர்சாமி இல்ல திருமண விழாவ்ல் தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். பிரகு அவர் விழாவில் உரையாற்றினார்.
பிரேமலதா விஜயகாந்த்
“எம்.ஜி.ஆர். வேறு, கருப்பு எம்.ஜி.ஆர். வேறு இல்லை. 2011-ல் ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சியும் ஒரே கூட்டணியாக சேர்ந்தனர். சில துரோகிகள் சூழ்ச்சியால் கூட்டணியில் பிளவு ஏற்பட்டது. கூட்டணியை உடைப்பதற்காகவே சில துரோகிகள் உருவானார்கள். எடப்பாடியாரும், நானும் எத்தனை துரோகங்கள், சூழ்ச்சிகள் வந்தாலும் அத்தனையும் வீழ்த்தி கடந்த 2011-ம் ஆண்டு வரலாற்றை 2026-ல் மீண்டும் நிகழ்த்துவோம்.
-விஜய் கடந்து வர வேண்டிய பாதைகள் நிறைய உள்ளது. எங்கள் கட்சியிலேயே தேசியமும், திராவிடமும் உள்ளது. தேசியத்தில் தான் திராவிடம் உள்ளது. திராவிடத்தில்தான் தமிழகம் உள்ளது. சீமான் அடிக்கடி அந்நியனாகவும், அம்பியாகவும் மாறுவார். அவரிடம் ஒரே நிலைப்பாடு இல்லை. இதற்கெல்லாம் நாம் பதில் சொல்ல தேவையில்லை.
எனக் கூறியுள்ளார்.
[youtube-feed feed=1]