ஊட்டி
ஊட்டி மலை ரயில் சேவை கனமழை காரணமாக தற்காலிக ரத்து செய்யப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்து வருகிறது. அதிலு குறிப்பாக மேட்டுப்பாளையம், குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
இங்கு இரவு மற்றும் அதிகாலை நேரத்தில் அதிக மழை பெய்கிறது. இவ்வாறு, குன்னூரில் பெய்து வரும் கனமழை காரணமாக ஹில்குரோ அருகே பாறைகள் விழுந்து தண்டவாளம் சேதம் அடைந்துள்ளது.
எனவே-குன்னூர் இடையிலான மலை ரயில் சேவை இன்று தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. ரயில்வே தண்டவாளத்தில் விழுந்த பாறைகளை அகற்றும் பணியில் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
Patrikai.com official YouTube Channel