சென்னை:  சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் சென்னை திரும்ப வசதியாக  இன்றுமுதல் 3 நாட்கள் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்து உள்ளது. அதன்படி, 12,846 பேருந்துகள் இயக்கப்பட  உள்ளது.

. அக்டோபர் 31-ந்தேதி நாடு முழுவதும் தீபாவளி  கொண்டாடப்பட்டது.  தீபாவளியை முன்னிட்டு  4 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டதால், பல லட்சம் பேர் செதாந்த ஊர்களுக்கு சென்றனர். அவர்களின் வசதிக்காக  கடந்த 28-ந்தேதியில் இருந்து 30-ம் தேதிவரை 10,784 பேருந்துகள் பல்வேறு ஊர்களுக்கு இயக்கப்பட்டன. சென்னையில் இருந்து தினசரி இயக்கப்படுகின்ற 2,092 பேருந்துகளுடன், 4,900 சிறப்பு பேருந்துகள் என 3 நாட்களும் சேர்த்து 11,176 பேருந்துகளும், ஏனைய பிற முக்கிய ஊர்களிலிருந்து பல்வேறு ஊர்களுக்கு 2,910 சிறப்பு பேருந்துகள் என மொத்தமாக 14,086 பேருந்துகள் இயக்கப்பட்டன.

சிறப்பு பேருந்துகள் மூலம் 5.76 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர் என போக்குவரத்து துறை தெரிவித்து உள்ளது.

இந்த நிலையில்  தீபாவளி பண்டிகையை முடித்துவிட்டு இன்றுமுதல் பலர் சென்னை திரும்புவார்கள். அதனால், அவர்களின் வசதிக்காக போக்குவரத்து துறை சிறப்பு பேருந்துகளை இயங்குகிறது.  இன்று முதல் (அக்டோபர் 2ந்தேதி)  4-ந்தேதி வரை (சனி, ஞாயிறு மற்றும் திங்கள்) 12,846 பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது.