வெலன்சியா
ஸ்பெயின் நாட்டில் திடீர் என வெள்ளம் ஏற்பட்டதால் 51 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

நேற்று ஸ்பெயின் நாட்டின் வெலன்சியா மாகாணத்தில் திடீரென கனமழை பெய்து கனமழை காரணமாக பல்வேறு ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இந்த வெள்ளம் நகரின் பல்வேறு பகுதிகளை சூழ்ந்ததன் காரணமாக பொதுமக்கள் பெரும் அவதியடைந்தனர். சாலை போக்குவரத்து, ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.,
ஆறுகளில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கி 51 பேர் உயிரிழந்து, பலர் படுகாயமடைந்தனர். கனமழை காரணமாக பல பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டு மீட்பு பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறத.
Patrikai.com official YouTube Channel