சென்னை

மிழகம் முழுவதும் 48000 காவல்துறையினர் தீபாவளிக்காக பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

நாளை தீபாவளி பண்டிகை நாளை (வியாழக்கிழமை) கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இந்த வருடம் பண்டிகை வியாழக்கிழமை வருவதால், அதற்கடுத்த நாளான வெள்ளிக்கிழமை அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. என்வே சனி, ஞாயிற்றுக்கிழமைகள் சேர்த்து தொடர்ச்சியாக 4 நாட்கள் தொடர் விடுமுறை வந்துள்ளது.

மக்கள் சொந்த ஊர்களுக்கு சென்று தீபாவளி பண்டிகையை உற்சாகமாக கொண்டாட முடிவு செய்து பலரும் நேற்று முன்தினத்தில் இருந்தே பயணம் செய்ய தொடங்கிவிட்டார்கள். தொடர்ச்சியாக நேற்றும் சென்னையில் இருந்து பலர் சொந்த ஊர்களுக்கு சென்றதால் பேருந்துகள், ரயில்களில் கூட்டம் அலைமோதியதை பார்க்க முடிந்தது.

தமிழக அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் தீபாவளி பண்டிகையையொட்டி 14 ஆயிரம் சிறப்பு பஸ்கள் அறிவிக்கப்பட்டன., மேலும் ரயில்களிலும் கூட்டம் அதிகமாகவே காணப்பட்டது.

பண்டிகைக்காக 4 மாதங்களுக்கு முன்பே திட்டமிட்டு முன்பதிவு செய்திருந்த பயணிகள், சென்னை சென்டிரல், எழும்பூர் ரெயில் நிலையங்களில் இருந்து புறப்பட்ட ரயில்களில் பயணித்தனர். சொந்த காரிலும் ஏராளமானோர் சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றனர்.

இன்றும்.பலர் தீபாவளியன்று ஊருக்கு செல்ல சென்னையில் இருந்து பயணிக்க திட்டமிட்டுள்ளனர். பேருந்துகள், ரயில்களிலும் வழக்கம்போல் தீபாவளிக்கு முந்தையநாளான இன்றும் மக்கள் கூட்டம் இருக்கும் என்பதால் போக்குவரத்து நெரிசலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது,

தீபாவளியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 48 ஆயிரம் காவல்துறையிஅர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். இவர்கள் பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், மார்க்கெட் பகுதிகளை தீவிரமாக கண்காணிப்பதுடன் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது.