மதுரை: பசும்பொன் தேவர் குருபூஜையில் கலந்துகொள்ள மதுரை சென்றுள்ள முதலமைச்சர் ஸ்டாலின் இன்று காலை மதுரையில் உள்ள தேவர் சிலை மற்றும் மருது பாண்டியர்கள் சிலைகளுக்கு மாலை அணிவித்து, மலர்தூவி மரியாதை செலுத்தினார். முதல்வர் வருகையையொட்டி, அந்த பகுதியில் 10ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 117-வது ஜெயந்தி மற்றும் 62-வது குருபூஜை விழா 3 நாட்களாக நடைபெற்று வருகிறது. இன்று  மூன்றாம் நாள் குரு பூஜை விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி, பசும்பொன்னில் உள்ள தேவர் நினைவாலயத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் உள்பட அரசியல் கட்சிகள் நேரில் சென்று மரியாதை செய்ய உள்ளனர். மேலும், மாநிலம் முழுவதும் உள்ள தேவர் சிலைகள் அலங்கரிக்கப்பட்டு, அரசியல் கட்சியினர் மற்றும் அவரது சமுத்தினரால் மரியாதை செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முதலமைச்சர் ஸ்டாலின் நேற்று இரவு மதுரை சென்றார். ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில் உள்ள அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவதற்காக தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் சென்னையிலிருந்து விமானம் மூலம் செவ்வாய்க்கிழமை இரவு மதுரைக்கு வருகை தந்தார்.   அங்கு விருந்தினர் மாளிகையில் ஓய்வுவெடுத்தார்.

இன்று காலை  பசும்பொன் செல்லும் வழியில்,   மதுரை கோரிப்பாளையத்தில் அவரது உருவச் சிலைக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.  பின்னர், சிலைக்கு முன் வைக்கப்பட்டிருந்த அவரது உருவப் படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். சிலைக்கு முன் வைக்கப்பட்டிருந்த தேவர் உருவப் படத்துக்கு மலர்தூவி மரியாதை  செய்தார்.

இதைத் தொடர்ந்து, மதுரை  தெப்பக்குளம் பகுதியில் உள்ள மருதுபாண்டியர்களின் உருவச் சிலைகளுக்கு நேரில் சென்று  மாலை அணிவித்து  மரியாதை செலுத்தினார்.‘

இதையடுத்து முதல்வர் பசும்பொன் நோக்கி பயணமானார்.