வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வெள்ளை மாளிகையில் இந்திய வம்சாவளியினருடன் சேர்ந்து தீபாவளியை கொண்டாடினார். அதே வேளையில் ‘விண்வெளியில் தங்கியுள்ள இந்திய வம்சாவளி வீராங்கனையான சுனிதா வில்லியம்ஸ் அங்கிருந்து தீபாவளி வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளார்.

உலகம் முழுவதும் நாளை மறுதினம் (அக்டோபர் 31ம் தேதி)   தீபாவளி பண்டிகை  இந்தியர்களால் கொண்டாடப்பட உள்ளது. . தீபாவளியை முன்னிட்டு நாடு முழுவதும் விழாக்கோலம் பூண்டுள்ளது. இந்தியர் அதிகம் வசிக்கும் அமெரிக்கா உள்பட உலக நாடுகளில் தீபாவளி பண்டிகை இப்போதே களைகட்டி உள்ளது.

இந்த நிலையில்,  அமெரிக்காவில் உள்ள வெள்ளை மாளிகையில் இந்திய வம்சாவளியனுடன்  தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது.  வெள்ளை மாளிகையில் உள்ள நீல அறையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள்,பல்வேறு துறைகளைச் சேர்ந்த சாதனையாளர்கள் என 600-க்கும் மேற்பட்ட இந்திய வம்சாவளி மக்கள் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய பைடன், ஒரு அதிபராக, வெள்ளை மாளிகையில் இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய அளவில் தீபாவளி விருந்தளித்திடும் மாபெரும் கௌரவம் எனக்கு கிடைத்துள்ளது. என்னைப் பொருத்தவரை, இது பெரிய விஷயம். கமலா ஹாரிஸ் முதல் டாக்டர் விவேக் மூர்த்தி வரை, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பலர் இன்று இங்கு கூடியுள்ளனர். அமெரிக்காவில் சிறப்பானதொரு நிர்வாகம் நடைபெறுவதன் மூலம் நான் அளித்த வாக்குறுதியை காப்பாற்றியுள்ளேன் என்ற பெருமித உணர்வு என்னிடம் இப்போது உள்ளது என நெகிழ்ச்சியுடன் கூறினார்.

இதற்கிடையில், விண்வெளியில் உள்ள இந்திய வம்சாவளியைச் சேர்ந்த  சுனிதா வில்லியம்ஸ் நெகிழ்ச்சியுடன் தீபாவளி வாழ்த்து தெரிவித்து உள்ளர். இவர் விண்கலம் மூலம் விண்வெளி ஆய்வகத்துக்கு சென்றுள்ள நிலையில்,   பூமிக்கு வெளியே சுமார் 260 மைல் தொலைவிலிருந்து  தீபாவளி வாழ்த்தை தெரிவித்து உள்ளார்.

கடந்த 5 மாதங்களாக சா்வதேச விண்வெளி நிலையத்தில் இருக்கும் சுனிதா வில்லியம்ஸ் விண்வெளியில் இருந்தபடியே,  வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், தங்களது குடும்பத்தில் பாரம்பரியமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வரும் கலாசாரத்தை பேணிப் பாதுகாப்பதற்காக, தனது தந்தை அர்ப்பணிப்புடன் செயல்பட்டு தனது குடும்பத்தினருக்கு தீபாவளி குறித்தும், பிற இந்திய பண்டிகைகளைப் பற்றியும் கற்றுத்தந்ததையும் நினைவுகூர்ந்துள்ளார்.

தீபாவளி கொண்டாட்டங்களில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனும், துணை அதிபர் கமலா ஹாரிஸும் பங்கேற்று சிறப்பிப்பதற்காக நன்றியும் தெரிவித்துக்கொண்டுள்ளார்.

சா்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்தவாறே அவர் வெளியிட்டுள்ள காணொலிப் பதிவில், “இன்று வெள்ளை மாளிகையிலும், உலகம் முழுவதும் தீபாவளியைக் கொண்டாடும் ஒவ்வொருவருக்கும் தித்திப்பான தீபாவளியாக அமைந்திட எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள்!

நல்ல விஷயங்கள் நிலைத்திருக்கும் சூழலில், தீபாவளி மகிழ்ச்சிக்கானதொரு கொண்டாட்டம். இந்த சிறப்பான தருணத்தை எங்கள் சமூகத்துடன் இணைந்து இன்று கொண்டாடியதற்கும், எங்களது பலவிதமான பங்களிப்பை அங்கீகரித்ததற்காகவும் அதிபர் ஜோ பைடனுக்கும் துணை அதிபர் கமலா ஹாரிஸுக்கும் நன்றி!” எனப் பேசியுள்ளார்.

அடுத்த மாதம் நடைபெறவுள்ள அதிபா் தோ்தலில் வாக்களிக்கவிருப்பதும் குறிப்பிடத்தக்க சுவாரசியமான தகவல்களுள் ஒன்றாகும். Advertisement இந்த நிலையில், சுனிதா வில்லியம்ஸ்

இதற்கிடையில்,  கடந்த 5 மாதங்களாக விண்வெளியில் சிக்கி உள்ள  சுனிதா வில்லியம்ஸ் மற்றும் பட்ச் வில்மோரும் 2025 பிப்ரவரியில்,   ஸ்பேஸ் எக்ஸ் நிறுவன விண்கலம் மூலம் பூமிக்குத் திரும்புவாா்கள் என்று நாசா அறிவித்துள்ளது.

முன்னதாக ஜூன் 5-ஆம் தேதி  இவர்கள்  நாசாவின்  ஸ்டாா்லைனா் விண்கலம், சா்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்த நிலையில்,  தொழில்நுட்பக் கோளாறு காரணாக அவா்களால் திட்டமிட்டபடி பூமி திரும்ப முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.