வாஷிங்டன்: விக்கிபீடியாவுக்கு நன்கொடை வழங்காதீர்கள் என பிரபல தொழிலபதிர் எலன்மஸ்க் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
விக்கிப்பீடியா என்பது விக்கிப்பீடியா எனப்படும் பயனர்களின் சமூகத்தின் கூட்டு முயற்சியால் உருவாக்கப்பட்ட ஒரு இலவச, திறந்த உள்ளடக்க ஆன்லைன் கலைக்களஞ்சியம் ஆகும். தளத்தில் பதிவுசெய்யப்பட்ட எவரும் வெளியீட்டிற்காக ஒரு கட்டுரையை உருவாக்கலாம்; கட்டுரைகளைத் திருத்துவதற்கு பதிவு தேவையில்லை. ஜிம்மி வேல்ஸ் மற்றும் லாரி சாங்கர் ஜனவரி 2001 இல் முந்தைய என்சைக்ளோபீடியா திட்டமான நுபீடியாவின் ஒரு பகுதியாக விக்கிபீடியாவை இணைந்து நிறுவினர்.
இந்த தளம், ஜனவரி 2015 நிலவரப்படி, இணையதளம் ஆங்கிலத்தில் ஐந்து மில்லியனுக்கும் அதிகமான கட்டுரைகளை வழங்கியது மற்றும் மற்ற எல்லா மொழிகளிலும் அந்த எண்ணிக்கையை விட அதிகமாக உள்ளது. அதே நேரத்தில், வணிகம் அல்லாத தளமாக செயல்பட்டு வருகிறது. இதில் வெளியிடப்படும் பல கட்டுரைகளில் பைலைன்கள் இல்லாததால், ஆசிரியர்கள் தாங்கள் எழுதுவதற்குப் பொதுவில் பொறுப்பேற்க மாட்டார்கள். அதேபோல, யார் வேண்டுமானாலும் எந்த கட்டுரையையும் திருத்த முடியும் என்பதால், தளத்தின் உள்ளீடுகள் நேர்மையற்ற திருத்தங்களுக்கு ஆளாக நேரிடும். அதனால் விக்கிப்பீடியாமீது சமீப காலமாக ஏராளமான விமர்சனங்கள் எழுந்துள்ளது.
இந்த நிலையில், “விக்கிபீடியாவிற்கு நன்கொடை அளிப்பதை நிறுத்துங்கள், பிரபல தொழில் அதிபரான எக்ஸ் சமூக வலைதளத்தின் உரிமையாளருமான எலன் மஸ்க் எச்சரித்துள்ளார். விக்கிபீடியா தீவிர இடதுசாரி செயல்பாட்டாளர்களால் கட்டுப்படுத்தப்படுகிறது” என்ற பகீர் குற்றச்சாட்டை சுமத்தி எலோன் மஸ்க் எனது எகஸ்தள பக்கத்தில் பதிவிட்டு உள்ளார்.
மேலும், விக்கிபிடியார், “சுமார் 40 விக்கிப்பீடியா ஆசிரியர்கள் தலைமையிலான ஒரு ஒருங்கிணைந்த பிரச்சாரம் இஸ்ரேலை சட்டப்பூர்வமற்றதாக்குவதற்கு வேலை செய்தது…” என்று அமெரிக்காவை தளமாகக் கொண்ட பைரேட் வயர்ஸ் செய்தி இணையதளத்தின் அறிக்கையை சுட்டிக்காட்டு விமர்சித்துள்ளார்.
மேலும், விக்கிபீடியா தங்கள் பெயரை டிக்கிபீடியா என மாற்றிக் கொண்டால், கூடுதலாக ஒரு பில்லியன் டாலர்கள் தருவதாகவும் எலான் மஸ்க் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்து உள்ளார்.
ஏற்கனவே விக்கிபிடியா, இந்தியாவின் பிரபல செய்தி ஊடகமான ஏஎன்ஐ செய்தி நிறுவனம் குறித்து தகறான தகவலை பதிந்துள்ளதாக குற்றம் சாட்டி டெல்லி உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. மனுவில், ANI செய்தி நிறுவனத்தின் விக்கிபீடியா பக்கத்தில், நிறுவனமே சில மாற்றங்களை செய்ததாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தது. அதில், இந்திய அரசின் பிரச்சாரக் கருவி என ஊடக நிறுவனத்தை விக்கிபீடியா குறிப்பிட்டிருந்தது. இந்த திருத்தங்கள் குறித்து தங்களது ஏதும் தகவல் தெரிவிக்கவில்லை என்றும், ஏசியன் நியூஸ் இன்டர்நேஷனல் (ANI) செய்தி நிறுவனத்தின்முகப்புப் பக்கத்தில் செய்த திருத்தங்களை குறித்த தகவல்களைப் பகிரத் தவறியதற்காக, விக்கிபிடியா மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
இந்த வழக்கின் விசாரணைக்கு விக்கிபிடியா முறையான பதில் அளிக்காத நிலையில், கடந்த செப்டம்பர் 5-ஆம் தேதி டெல்லி உயர் நீதிமன்றம் விக்கிபீடியவை கடுமையாக எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், தற்போது எலன் மஸ்க் விக்கிபீடியாவை கடுமையாக சாடியுள்ளார்.