விழுப்புரம்: விஜய்யின் தமிழக வெற்றிக் கழக மாநாடு நேற்று முடிவடைந்த நிலையில்,  மாநாட்டு பந்தலில் ஏராளமான சேர்கள் உடைத்து நொறுக்கப்பட்டு கிடந்ததும், குப்பை கூளங்கள் குவிந்து கிடப்பதும் தெரிய வந்துள்ளது. இதுதொடர்பான புகைப்படங்கள்  வைரலாகி வருகின்றன.

 மாநாட்டு திடலில் சுமார் 3 டன் அளவுக்கான மக்கும் மற்றும் மக்காத  குப்பைகள் சேர்ந்துள்ளதாகவும்,  உடைக்கப்பட்ட பிளாஸ்டிக் சேர்கள், பேனர்கள்,  மது பாட்டில்கள்,  மீதமான உணவு பொட்டங்கள், ஆயிரக்கணக்கான தண்ணீர் காலி  பாட்டல்கள் என ஏராளமான குப்பைகள்  குவிந்து கிடப்பதால், அந்த பகுதியே துர்நாற்றம் வீசுவதாக கூறப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்துள்ள வி.சாலையில் அக்டோபர் 27ந்தேதி பிரமாண்டமாக நடைபெற்றது.  ‘வெற்றி கொள்கை திருவிழா’ என்ற பெயரில்  நடைபெற்ற இந்த மாநாட்டுக்கு மாநிலம் முழுவதும் பல லட்சம் பேர் வி.சாலையில் குவிந்தனர். மாலை 3மணிக்குத்தான் மாநாடு தொடங்கிய நிலையில், அதிகாலை முதலே  தவெக தொண்டர்கள் மாநாட்டு பந்தலுக்கு வரத்தொடங்கினர். இதனால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் காவல்துறையினர், பவுன்கள் ஒழுங்குபடுத்தி கட்சி தொண்டர்களை மாநாட்டு பந்தலுக்குள் அனுமதித்தனர்.

மாலை 3மணிக்கு தொடங்கிய மாநாட மாலை 7 மணிக்கு நிறைவு பெற்றது. இம்மாநாட்டிற்கு 15,000 வாகனங்கள் வந்ததாகவும், சுமார் 5 லட்சதுக்கும் அதிகமானோர் மாநாட்டில் பங்கேற்று இருப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாநாடு முடிந்ததும், தொண்டர்கள் ஒருவருக்கொருவர் முண்டியடித்து வெளியே சென்றதால் சலசலப்பு ஏற்பட்டது. இதையடுத்து, கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், தொண்டர்கள் அமைதியாக கலைந்துசெலும்படியும், போலீசாருக்கு ஒத்துழைப்பு வழங்கும்படியும் அறிவுறுத்திக்கொண்டே இருந்தார்.

இதைத்தொடர்ந்து,  மாநாட்டுக்கு வந்த ஆயிரக்கணக்கான வாகனங்கள், அந்த பகுதியில் பார்க்கிங் செய்யப்பட்ட நிலையில், மாநாடு முடிந்தவுடன்  அனைத்து வாகனங்களும்ட ஒரே நேரத்தில் புறப்பட்டத்தால் கடுமையான வாகன நெருக்கடி ஏற்பட்டது. அந்த பகுதியை கடக்கவே சுமார் 4 மணி நேரம்  ஆனதாக கூறப்படுகிறது. மேலும் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள்   யூ-டர்ன் கூட போட முடியாமல் திருச்சி செல்ல வேண்டிய வாகனங்கள் திண்டிவனம் சென்று அங்கிருந்து மீண்டும் திரும்பி விழுப்புரம் வழியாக பயணித்தது. மாநாடு நடைபெற்ற வி.சாலை முதல் விழுப்புரம் வரையிலான 17 கிலோ மீட்டர் தூரத்தை கடக்க 5 மணி நேரமானதாகவும், சுமார் 3 கி.லோ மீட்டர் வரை வாகனங்கள் அணிவகுத்து நின்றதாகவும் கூறப்படுகிறது.

மேலும் பேருந்துகளில் மாநாட்டிற்கு வந்தவர்கள் , மாநாடு முடீந்ததும், வி.சாலையிலிருந்து விக்கிரவாண்டி சுங்கச்சாவடிக்கு 6 கிலோ மீட்டர் நடந்து வந்து, பேருந்துகள் வருமான என எதிர்பார்த்த நிலையில்,  அரசு பேருந்துகள் அனைத்தும் மாற்று வழியில் திருப்பி விடப்பட்டதால், அவர்கள் செய்வதறியாகது, அந்த பகுதியில் பூட்டப்பட்டு கிடந்த கடைகள் மற்றும்  உணவகங்களின் வாசல்களில் படுத்து தூங்கி எழுந்து, அதிகாலை இயக்கப்பட்ட பேருந்தில் தங்கள் ஊருக்கு பயணித்தனர்.

இந்த மாநாடு முடிவடைந்ததும், இன்று காலை அங்கு சென்ற துப்புரவு பணியாளர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.  மாநாடு முழுவதும் குப்பை கூளமாக காட்சி அளித்ததை கண்டு மனம் வருந்தினர்.

மாநாட்டு திடலில் லட்சக்கணக்கான காலி வாட்டர் பாட்டில்கள், உணவு தட்டுகள்,  ஸ்நாக்ஸ் மற்றும் பிஸ்கட்பாக்கெடுகளின்  குப்பைகள், ஏராளமான உடைக்கப்பட்ட பிளாஸ்டிக் சேர்களின் பாகங்கள், பேனர்கள், மது பாட்டிகள் ,மீதமான உணவுகளை என ஆங்காங்கே சிதறி கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இந்த குப்பைகள் சுமார் சுமார் 3 டன் அளவுவில் இருக்கும் என்றும் அதை அகற்றும் பணி நடைபெற்ற வருவதாகவும்,., மீதமான உணவுகளை  கட்சியினர் வீசிச் சென்றதால்,  அப்பகுதியே துர்நாற்றம் வீசி வருவதாகவும் தெரிவித்து உள்ளனர்.