சென்னை:  சுங்கச்சாவடிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டால் வாகனங்களிடம் இருந்து சுங்கக்கட்டணம் வசூலிக்காமல் போக்குவரத்தை அனுமதிக்கலாம் என சுங்கத் துறையினருக்கு தேசிய நெடுஞ்சாலை ஆணையம்  அறிவுறுத்தி உள்ளது.

தற்போது தீபவாளி பண்டிகை வருகிறது. இதையொட்டி, 4 நாட்கள் தொடர் விடுமுறை வருவதால், பலர் சொந்த ஊர்களுக்கும், சுற்றுலா தலங்களுக்கும் செல்வர். இதனால் பல சுங்கச்சாவடிகளில் கடுமையான வாகன நெரிசல் காணப்படும். பண்டிகை காலங்களில் வாகனங்கள் தொடர்ச்சியாக வருவதால் சுங்கச்சாவடிகளில் நெரிசல் ஏற்பட்டு பலமணி நேரம் பயணம் தடைபடுகிறது   குறிப்பாக சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை சுட்டி காட்டப்பட்டுள்ளது. இதன் காரணமாக சுங்க கட்டணம் வசூலிக்கும் ஊழியர்களுடன் வாகன ஓட்டிகள் தகராறு செய்வதும் வாடிக்கையாகி வருகிறது.

இந்த நிலையில், வாகன நெரிசலை கருத்தில் கொண்டு, சுங்கக்சாவடிகளில்  வாகன நெரிசல் ஏற்பட்டால் இலவசமாக அனுமதிக்கலாம் என்று சுங்கச்சாவடி ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை உள்ள அனைத்து சுங்கச்சாவடிகளிலும் கட்டணம் இல்லாமல் அனுமதிக்கவும் என தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் சம்பந்தப்பட்ட சுங்கச்சாவடிகளுக்கு அறிவுறுத்தி உள்ளனர்.

பண்டிகை காலங்களில் சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிப்பதை தவிர்க்க வேண்டும். தமிழக அரசு தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திடம் ஏற்கனவே அறிவுறுத்தி உள்ளது. இதைத்தொடர்ந்து,   சுங்கச்சாவடிகளில்  வாகன நெரிசல் ஏற்பட்டால் இலவசமாக அனுமதிக்கலாம் எனவும், சுங்கச்சாவடிகளில் கூடுதலாக ஊழியர்களை நியமித்து வாகனங்கள் நெரிசல் இல்லாமல் செல்லவும் ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதாக நெடுஞ்சாலைத்துறை ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில்  பலர்,   `மூன்று நிமிடங்களுக்கு மேல் வாகனம் நிறுத்திவைக்கப்பட்டால், கட்டணம் செலுத்தத் தேவையில்லை’ என கூறி சுங்கக்சாவடி ஊழியர்களிடம் தகராறில் ஈடுபட்டு வருகின்றனர். இது  தவறான தகவல் என தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மறுப்பு தெரிவித்து உள்ளது.

வேகமாகச் செல்ல வேண்டுமென்று நினைப்பவர்கள்,  தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கக்கட்டணம் செலுத்தி அந்தச் சாலையில் போய்க்கொள்ளலாம்.  அதைச் செலுத்த விரும்பாதவர்கள் நகருக்குள் செல்லும் சாலைகளைப் பயன்படுத்திக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.