விக்கிரவாண்டி
தமிழக வெற்றி கழக மாநாட்டில் தொண்டர்களுக்கு உணவு வழக்கப்பட மாட்டாது என தகவல்கள் தெரிவிக்கின்றன.
மதுரையில் கடந்த ஆண்டு அதிமுக பொன்விழா மாநாடு நடைபெற்ற போது மாநாட்டில் கலந்து கொண்ட 5 லட்சம் தொண்டர்களுக்கு சம்பார் சாதம், புளி சாதம் என பலவகையான சைவ உணவுகள் தயாரிக்கப்பட்டன.
இவை தொண்டர்களுக்கு வழங்கப்பட்டு, மீதம் 2 டன்னுக்கும் அதிகமான உணவுகள் மீந்து வீணாகின. எனவே அவை அனைத்தும் அருகிலுள்ள பகுதிகளில் குழித்தோண்டி கொட்டப்பட்டதாக செய்திகள் வெளியானது. இவ்வாறிஉணவு டன் கணக்கில் வீணானதால், ஒட்டுமொத்த மாநாட்டின் சாராம்சமும் வெளியே தெரியாமல் உணவு வீணானது மட்டுமே பேசுபொருள் ஆனது.
எனவே தமிழக வெற்றிக் கழகம், மாநாட்டு திடலில் தொண்டர்களுக்கு உணவு வழங்குவதை தவிர்த்துள்ளது. தவெக மாநாட்டிற்கு வரும் தற்காலிக மாவட்ட பொறுப்பாளர்கள், அந்தந்த மாவட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு உணவுகளை ஏற்பாடு செய்ய வேண்டும் என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதையொட்டி விழுப்புரத்தை சுற்றியுள்ள உணவகங்களில் உணவுகள் ஆர்டர் செய்யப்பட்டு வருகிறது என தகவல்கள் தெரிவிக்கின்றன.