சென்னை

மெரிக்க துணை தூதருடன் இணைந்து தமிழக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஒசாக் இந்தியா வருடாந்திர கூட்டதைதொடகி வைத்துள்ளார்.

அமெரிக்க வெளியுறவுத் துறையின் உறவுநய‌ பாதுகாப்பு சேவைப் பிரிவு (DSS) மற்றும் வெளிநாட்டில் இயங்கும் அமெரிக்க நிறுவனங்களின் பாதுகாப்பு நிபுணர்களுக்கு இடையிலான அரசு-தனியார் கூட்டாண்மை ஒசாக் (OSAC) என அழைக்க்கப்பட்டுகிறது.. இந்த ஒசாக் உறுப்பினர்கள் பாதுகாப்பு குறித்த‌ தகவல்களை சரியான நேரத்தில் பகிர்ந்து கொள்வதோடு வெளிநாடுகளில் அமெரிக்க உறவுகளைப் பாதுகாப்பதற்கான‌ வலுவான பிணைப்புகளைப் பராமரிக்கிறார்கள்.

நேற்று அமெரிக்க அரசு மற்றும் இந்தியா முழுவதும் உள்ள அமெரிக்க தனியார் நிறுவன பாதுகாப்பு அலுவலர்களுக்கிடையே ஒத்துழைப்பை வளர்க்கும் நோக்கில் சென்னையில் நடைபெற்ற ஓசாக் இந்தியா வருடாந்திர‌ கூட்டத்தை சென்னையில் உள்ள அமெரிக்க துணைத் தூதர் கிறிஸ் ஹோட்ஜஸ் மற்றும் தமிழக் தகவல் தொழில் நுட்பவியல் துறை மற்றும் டிஜிட்டல் சேவைகள் அமைச்சர் டாக்டர் பழனிவேல் தியாகராஜன் தொடங்கி வைத்தனர்.

இந்த கூட்டம் பயிற்சிகள், ஆலோசனைகள், நிகழ்ச்சிகள், பாதுகாப்பு எச்சரிக்கைகள் மற்றும் பகுப்பாய்வு ஆகியவற்றில் அமெரிக்க மற்றும் இந்திய தனியார் துறை பங்குதாரர்களுடனான‌ ஒத்துழைப்பை வலுப்படுத்தவதற்கான வாய்ப்பாக சென்னையிலுள்ள அமெரிக்க துணைத் தூதரகம் மற்றும் இந்தியா முழுவதும் உள்ள தூதரக மற்றும் பெருநிறுவன பாதுகாப்பு அலுவல‌ர்களுக்கு அமைந்தது.

அமெரிக்க துணைத் தூதரகத்தைச் சேர்ந்த உறவு நய‌ பாதுகாப்பு சேவைப் பிரிவு மண்டல அலுவலர் ஸ்காட் ஷானர் மற்றும் ஜான் பால் மாணிக்கம் தலைமையிலான ஓசாக் இந்தியா சென்னை கிளை இந்தியாவின் பழமையான ஓசாக் கிளைகளில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கதாகும்.