டெல்லி: நவம்பர் 6ம் தேதி காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் தலைநகர் டெல்லியில் நடைபெறும் என மத்திய நீர்வளத்துறை அறிவித்துள்ளது.
காவிரி நதிநீர் பங்கீட்டில் உள்ள பிரச்சினைகளை களைவதற்காக, தமிழ்நாடு, கர்நாடகா, கேரள, புதுச்சேரி மாநிங்களுக்க இடையே உச்சநீதிமன்ற உத்தரவுப்படி காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டு, அனைத்து மாநிலங்களைச் சேர்ந்த அதிகாரிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டு உள்ளது.. இந்த ஆணையம், காவிரி நீர் இருப்பை அறிந்து, தமிழ்நாடு உள்பட மற்ற மாநிலங்களுக்கு உரிய பங்கீட்டின்படி மாதந்தோறும் தண்ணீரை திறந்துவிட அறிவுறுத்தி வருகிறது.
இந்த ஆணையம் இதுவரை 34 முறை கூடியுள்ள நிலையில், வரும் நவம்பர் மாதம் 6ந்தேதி 35வது முறையாக கூடுகிறது. நீர்வளத்துறை தலைவரான, காவிரி ஆணைய தலைவர் எஸ்.கே.ஹல்தார் தலைமையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த கூட்டத்தில், அக்டோபர், நவம்பர் மாதங்களில் காவிரி நீரை தமிழ்நாடு உள்ளிட்ட 4 மாநிலங்களும் பங்கீடு செய்வது குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது தமிழ்நாடு, கர்நாடகா, புதுச்சேரி மற்றும் கேரள மாநில பிரதிநிதிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது அதன்படி காவிரி ஆணைய கூட்டத்தில் தமிழ்நாடு, புதுச்சேரி, கர்நாடகம், கேரளாவைச் சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.