சென்னை: சென்னை தலைமைச் செயலக கட்டிடத்தில் இன்று காலை திடீரென அதிர்வு உணரப்பட்டதால், அங்கு பணியாற்றி வந்த ஊழியர்கள் பதற்றத்துடன் கட்டித்தை விட்ட வெளியேறினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து அங்கு வந்து பார்வையிட்ட அமைச்சர் எ.வ.வேலு. சுவரில் ஒட்டப்பட்டுள்ள டைல்ஸ் உடைந்ததால் ஏற்பட்ட அதிர்வு என்றும், ஓரிரு நாளில் சரி செய்யப்படும் என்றும் கூறியுள்ளார்.
ஏற்கனவே, தலைமைச்செயலகம் செயல்பட்டு வரும் நாமக்கல் மாளிகை 1980ல் கட்டப்பட்டது. இங்கு அரசின் பெரும்பாலான துறைகள் செயல்பட்டு வருகின்றன. பல ஆயிரம் பணியாற்றி வருகின்றன. இங்கு இடநெருக்கடி மற்றும் கட்டிடம் கட்டப்பட்டு 40ஆண்டுகளை கடந்து விட்டதால், கடந்த அதிமுக ஆட்சியின்போது, ஜெயலலிதா முதல்வராக இருக்கும்போது புதிய தலைமைச் செயலகம் கட்டிடம் கட்ட முடிவு செய்து, அதற்காக இடம் தேர்வு செய்வதில் தீவிரம் காட்டினார். ஆனால், அப்போதைய எதிர்க்கட்சியான திமுக, பல்வேறு வழக்குகளை போட்டு, புதிய தலைமைச்செயலகம் கட்டும் பணியை தடுத்தது. பின்னர் திமுக ஆட்சிக்கு வந்ததும், ஓமந்தூரார் தோட்டத்தில் பிரமாண்டமான முறையில் புதிய தலைமைச் செயலகம் கட்டடப்பட்டு திறக்கப்பட்டது. ஆனால், அடுத்து ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா, காழ்ப்புணர்வு காரணமாக, அந்த கட்டிடத்தை, மருத்துவமனையாக மாற்றினார். தற்போது அந்த கட்டிடம் ஒமந்தூரார் பல்நோக்கு மருத்துவமனையாக செயல்பட்டு வருகிறது. இதைத்தொடர்ந்து வேறு இடத்தில் தலைமைச் செயலகம் கட்டுவது தொடர்பாக தமிழ்நாடு அரசு யோசித்து வருகிறது.
இந்த நிலையில், தலைமை செயலகத்தில் இன்று காலை அதிர்வு உணரப்பட்டது. அதே நேரத்தில் முதல் தளத்தில் உள்ள தரையில் இருக்கும் டைல்சும் பலத்த சத்ததுடன் உடைந்து விரிசல் ஏற்பட்டது. இதையறிந்த அங்கு பணியாற்றி வந்த ஊழியர்கள் நில அதிர்வாக இருக்கலாம் என எண்ணி கட்டித்திற்குள் இருந்து பதற்றத்துடன் ஓடி வெளியேறினர். இதனால் அப்பகுதி சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக உடனே சம்பவ இடத்துக்கு அதிகாரிகள் மற்றும் பொறியாளர்களுடன் வந்த பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் எ.வ.வேலு விளக்கம், தளத்தில் ஏற்பட்ட விரிசலை ஆய்வு செய்தார். அதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தவர், சென்னை தலைமைச்செயலக கட்டிடம் உறுதியாக உள்ளது. கட்டிடத்தின் உறுதித்தன்மை உருக்குலையவில்லை அதனால் ஊழியர்கள் அச்சம் வேண்டாம் என தலைமைச் செயலக ஊழியர்களுக்கு தெரிவித்தார்.
தொடர்ந்து பேசியவர், டைல்சில் ஏற்பட்ட ஏர் கிராக்கை அலுவலக ஊழியர்கள் விரிசல் என நினைத்து பயந்துவிட்டனர் என கூறிய அமைச்சர், தரையில் ஏற்பட்ட சுருங்கும் தன்மை காரணமாக டைல்சில் ஏர் கிராக் ஏற்பட்டுள்ளது. அதனால், அது சத்ததுடன் உடைந்துள்ள, தற்போது பொறியாளர்கள் பரிசோதித்ததில் எந்த பிரச்சனையும் இல்லை என தெரிய வந்துள்ளது. என்றார்.
மேலும், இந்த கட்டிடம் 1974-ல் கட்டப்பட்டது என்றவர், இந்த கட்டிடத்தில், 14 வருடங்களுக்கு முன் சிறுசிறு டைல்ஸ்கள் போடப்பட்டது என்றவர், பூச்சு காரணமாக இந்த கிராக் ஏற்படவில்லை என்றவவர், அது தவறான குற்றச்சாட்டு என்று மறுத்தவர், தற்போதுள்ள 1-க்கு 1 அளவுள்ள பழைய டைல்ஸ்கள் அகற்றப்பட்டு 2-க்கு 2 அளபில் புதிய டைல்ஸ் நாளையே போடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது எ என்றார்.
இதைத்தொடர்ந்து, அந்த பகுதியில் ஆய்வு செய்த போலீசாரும், இது சாதாரண விரிசல் தான் என்றும், ஊழியர்கள் அச்சப்பட தேவையில்லை என்றும் விளக்கம் அளித்தனர்.