திருவாரூர் மாவட்டம், கொரடாச்சேரி, பஞ்சநதீஸ்வரர் கோயில்
பொது தகவல்:
பிரகாரத்தில் கிழக்குப் பக்கம் விநாயகர், தெற்கு பக்கம் தட்சிணாமூர்த்தி, வடக்குப்பக்கம் துர்க்கை, தெற்குபக்கம் சண்டிகேஸ்வரர் , மேற்கு பக்கம் பைரவர், சனீஸ்வரர் உடன் லிங்கோத்பவர் அருள்பாலிக்கிறார்கள். மடப்பள்ளி எதிரில் மகாமண்டம் உள்ள து. இதில் 500 பேர் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்யும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. கற்பககிரகத்தில் ஒரு கலசமும் பிற சன்னதிகளில் தனித்தனியாக கலசமும் உள்ளது.
அம்பிகை தெற்கு பக்கமும், சர்வசித்திவிநாயகர், சண்முகநாதர் வள்ளி சேனாவுடனும்,(மேலே திருமணக்கோலத்திலும்), கோயில் நுழைவுவாயில் வலப்பக்கம் கிழக்கு முகம் ஸ்ரீதேவி, பூமிதேவியுடன் சீனுவாச பெருமாளும், அவரை பார்த்த வண்ணம் கருட ஆழ்வாரும், வடக்கு முகம் பார்த்து ஆபத்சகார ஆஞ்சநேயரும் அருள் பாலிக்கின்றனர்.
பிரார்த்தனை
திருமண தடை நீங்கவும், குழந்தை பாக்கியம் மற்றும் சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்க இங்கு பிரார்த்தனை செய்கிறார்கள்.
நேர்த்திக்கடன்:
வேண்டுதல் நிறைவேறியவர்கள் சிறப்பு ஹோமங்கள் நடத்தியும், அன்னாபிஷேகம் செய்தும், நவக்கிரக ஹோமம் செய்தும் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துகிறார்கள்.
தலபெருமை:
1925, 1957 மற்றும் 1988 ம் ஆண்டுகளில் கும்பாபிஷேகம் நடந்துள்ளது. ஒரே இடத்தில் சிவ வைண வதலமாக இருப்பது சிறப்பு. நந்திகேஸ்வரர் திருமேனியில் சிவபானம் அடங்கிருப்பது அபூர்வமான செய்தியாகும். சூரியபகவான், மகாவிஷ்ணு, பெருமாள் பூஜித்த தலம்.
பஞ்ச நதீஸ்வரர் பெயராலும், பஞ்சலோங்களை கொண்டு, பஞ்சபூதங்கள், ஐம்புலங்கன்களை அடக்கி சிவனை வழிபட்டதால், பஞ்சாட்சரபுரம் என அழைக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் பார்வையற்றவர்கள் சிலர் இங்கு வழிபாடு நடத்தியதால் குருடர்சேரி என்றாகி பின்னர் கொரடாச்சேரி என மருவியதாக கூறப்படுகிறது.
சிவவிஷ்னு தலமான இங்கு மேற்கு பக்கம் நான்கு கலசம் அமைக்கப்பட்டுள்ள ராஜகோபுரம் வழியாக உள்ளே சென்றால் கிழக்குப் பக்கம் நந்தியும், மேற்குபக்கம் நாக ஆபரணத்தில் மூலவரும் அருள்பாலிக்கின்றனர்.
தல வரலாறு:
கல்வெட்டுகள் அதிகளவில் அழிந்துள்ளதால் வரலாறுகள் தெரியவில்லை. 1500 ஆண்டுகளுக்கு மேற்பட்ட கோயில் . கருவூரார் வழித்தோன்றலில் வந்த திருப்பதி அருகில் காளகஸ்தியில் அவதரித்த சுப்பிரமணிய சுவாமிகள் இக்கோயிலை புதுப்பித்துள்ளார். திருஞான சம்மந்தர் பூதூர் வழியாக செல்லும் திருக்கொள்ளிகாடு பொங்கு சனீஸ்வரர் கோயிலுக்கும், திருவிடைவியல் கோயிலுக்கும் சென்று பாடல் பாடியதற்கு இவ்வழியாக சென்றிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
திருவிழா:
தமிழ் வருடப்பிறப்பு, வைகாசி விசாகம், ஐப்பசி அன்னாபிஷேகம், கார்த்திகை தீபவிழா, பிரதோஷம், அமாவாசை, ஆருத்ரா தரிசனம், மாசிமகம், சிவராத்திரி, சூரிய பூஜை, பங்குனி உத்திரம் மற்றும் வைகுண்ட ஏகாதசி
தல சிறப்பு:
பங்குனி 7ம் தேதியில் இருந்து 13ம்தேதி வரை ஏழு நாட்கள் மாலை 6 மணிக்கு நந்திகேஸ்வரரின் இரு கொம்புகள் வழியாக சூரிய ஒளி ஊடுருவி மூலவர் மீது படர்வது சிறப்பு.
சிறப்பம்சம்:
பங்குனி 7ம் தேதியில் இருந்து 13ம்தேதி வரை ஏழு நாட்கள் மாலை 6 மணிக்கு நந்திகேஸ்வரரின் இரு கொம்புகள் வழியாக சூரிய ஒளி ஊடுருவி மூலவர் மீது படர்வது சிறப்பு