சென்னையில் தயாரிக்கப்பட்ட வெள்ளி அலமாரி கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது.
சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்த பிரபல வெள்ளி பொருட்கள் விற்பனை நிறுவனம் இந்த அலமாரியை செய்துள்ளது.
துணி வைப்பதற்கான இந்த வார்டரோப் 7 அடி உயரம் 3 அடி அகலமும் குறுக்காக 2 அடி ஆழம் கொண்டது.
கீல்கள், ஸ்க்ரூ, ஆணி, நட், போல்ட் என இந்த அலமாரியில் இடம்பெற்றுள்ள அனைத்தும் 92.5% சுத்த வெள்ளியால் செய்யப்பட்டுள்ளது.
பூ வேலைப்பாடுகளுடன் பிச்வாய் மற்றும் ராஜ்புட் கலைவண்ணத்துடன் செய்யப்பட்டுள்ள இந்த அலமாரி கோத்தம் 158.78 கிலோ எடை கொண்டது.
12 கலைஞர்களின் உழைப்பால் உருவாக்கப்பட்டுள்ள இந்த அலமாரி செய்யும் பணி ஜூலை மாதம் தொடங்கி அக்டோபர் முதல் வாரத்தில் நிறைவடைந்ததாகக் கூறப்பட்டுள்ளது.
ஏற்கனவே, இந்நிறுவனம் செய்த மிகப்பெரிய வெள்ளி சிற்பம் கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது தவிர மிகப்பெரிய வெள்ளி கடிகாரம் அமெரிக்காவின் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் அகாடமியால் சான்றளிக்கப்பட்டுள்ளது.
தற்போது அதே நிறுவனம் செய்துள்ள வெள்ளி அலமாரி, உலகின் மிகப்பெரிய வெள்ளி வார்டுரோப் என்று கின்னஸ் புத்தகம் சான்று வழங்கியுள்ளது.