வயநாடு நாடாளுமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனுவை இன்று தாக்கல் செய்தார் பிரியங்கா காந்தி.

வேட்புமனு தாக்கல் செய்த பிரியங்கா காந்தி மாநில கட்சி நிர்வாகிகள் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்ட சாலை பேரணியில் கலந்து கொண்டார்.
இவருடன் மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தியும் இந்த பேரணியில் கலந்துகொண்டார்.
காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் பிரியங்கா காந்தியை எதிர்த்து பாஜக சார்பில் நவ்யா ஹரிதாஸும் இடதுசாரி கூட்டணி சார்பில் சத்தயன் மொக்கெரியும் போட்டியிடுகின்றனர்.
நவம்பர் 13ம் தேதி நடைபெற உள்ள இந்த மக்களவை தொகுதிக்கான வாக்குகள் நவம்பர் 23ம் தேதி எண்ணப்படுகிறது.
Patrikai.com official YouTube Channel