237 ஆண்டுகளுக்கு முன்பு அச்சிடப்பட்ட அமெரிக்க அரசியலமைப்புச் சட்ட அரிய நகல் கடந்த வாரம் ஏலம் விடப்பட்டது.

வட கரோலினாவில் அக்டோபர் 17ஆம் தேதி (வியாழக்கிழமை) நடந்த இந்த ஏலத்தில் $9 மில்லியனுக்கு விற்கப்பட்டது.

1787ஆம் ஆண்டு அமெரிக்க அரசியலமைப்பு மாநாட்டிற்குப் பிறகு அச்சிடப்பட்ட அரசியலமைப்புச் சட்ட நகலை ஏலத்தில் எடுத்தவரின் பெயர் உடனடியாக வெளியிடப்படவில்லை.

‘பிரங்க் ஆக்‌ஷன்ஸ்’ என்னும் தனியார் ஏல நிறுவனம் இந்த ஆவணத்தை விற்றது.

$1.1 மில்லியன் அமெரிக்க டாலருக்குத் தொடங்கிய இந்த நகலின் ஏலத்தொகை வெறும் ஏழு நிமிடங்களில் 9 மில்லியன் அமெரிக்க டாலராக அதிகரித்தது ஏலத்தில் பங்கேற்றவர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.