சென்னை; தமிழகத்தின் இருமொழி கொள்கை கடைபிடித்து வருவதை ஆளுநர் புரிந்துகொள்ள வேண்டும் என முன்னாள் மத்திய அமைச்சரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான  ப.சிதம்பரம் தெரிவித்து உள்ளார்.

 “தாய் தமிழ்நாட்டில் இந்திக்கு விழா எடுக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக பொதிகை தொலைக்காட்சியில் நடைபெற்ற விழாவில், தமிழ்த்தாய் வாழ்த்தில் திராவிட நாடு என்ற வார்த்தை தவிர்க்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு அரசுக்கும், ஆளுநருக்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரம்,. “தமிழ்நாட்டில் பல ஆண்டுகளாக எந்த அரசு வந்தாலும் இரு மொழி கொள்கையைத் தான் கடைபிடித்து வருகின்றன என்றவர், தமிழக மக்களின் எண்ணங்கள் இரு மொழிக் கொள்கைதான், அதை தமிழக அரசு பிரதிபலிக்கிறது மற்ற மாநிலங்களில் மூன்று மொழிகள் கற்றுத் தருவதாக கூறுவது தவறு”  இதனை ஆளுநர் புரிந்துகொள்ள வேண்டும் தெரிவித்துள்ளார்.

“தமிழக மக்களின் எண்ணங்கள் சிந்தனைகளுக்கு எதிராக கருத்து தெரிவிப்பவர்தான் ஆளுநர். மற்ற மாநிலங்களில் மூன்று மொழிகள் கற்றுத் தருவதாக கூறுவது தவறு. ஹிந்தி பேசும் மாநிலங்களில் அந்த மாணவர்கள், இளைஞர்களுக்கு இந்தி மொழி மட்டும்தான் தெரியும். அவர்களுக்கு ஆங்கிலம் கற்றுத் தருவது கிடையாது, ஆங்கில ஆசிரியர்களும் கிடையாது, ஆங்கில புத்தகங்களும் கிடையாது. அவர்களுக்கு ஆங்கில வாசகங்கள், வாக்கியங்கள் எழுதவோ படிக்கவோ தெரியாது. தமிழ்நாட்டில் பல ஆண்டுகளாக எந்த அரசு வந்தாலும் இரு மொழி கொள்கையைத் தான் கடைபிடித்து வருகின்றன.

தமிழகத்தில் இந்தி தேர்வுகளில் பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் ஆண்டுதோறும் படித்து தேர்ச்சி பெற்று வேலைக்கு செல்கின்றனர். தமிழகத்தில் தனியார் மற்றும் மத்திய அரசு பள்ளிகளில் இந்தியை கற்றுத் தருகின்றனர். இந்தியை விரும்பி படிக்கும் மாணவர்களுக்கு இங்கு தடை ஏதும் கிடையாது. தமிழக மக்களின் எண்ணங்கள் இரு மொழிக் கொள்கைதான் இதனை ஆளுநர் புரிந்து கொள்ள வேண்டும்” என்றார்.