ஆளுநர் கலந்துகொண்ட டிடி பொதிகை தொலைக்காட்சியின் இந்தி மாத நிறைவு நாள் நிகழ்ச்சியில் திராவிடம் என்ற வார்த்தையை புறக்கணித்து பாடப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுக்கு கண்டனம் எழுந்தது.

இதற்கு விளக்கமளித்த ஆளுநர் ரவி, தமிழ்த்தாய் வாழ்த்தை துல்லியமாகக் பாடக்கூடியவன் நான் இந்த தவறு தன்னுடையது அல்ல நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த டிடி தமிழ் தொலைக்காட்சியுடையது என்று விளக்கமளித்தார்.

இதற்கு பதிலடி கொடுத்துள்ள முதல்வர் மு.க. ஸ்டாலின், “பெருமையோடு துல்லியமாக பாடுவேன் என்று விளக்கம் கொடுக்கும் ஆளுநர், உரிமையோடு அந்த இடத்திலேயே தவறை சுட்டிக் காட்டியிருக்கலாமே எனாறு கேள்வியெழுப்பியுள்ளார்.

மேலும் இந்த தவறை சுட்டிக்காட்டி சரியாக பாடும்படி உரிமையோடு பணித்திருக்கலாமே ? என்றும் கேட்டுள்ளார்.

‘ஒரு ஆளுநருக்கு எதிராக முதலமைச்சர் இனவாதக் கருத்தைத் தவறான குற்றச்சாட்டுகளுடன் முன்வைப்பது துரதிருஷ்டவசமாக மலிவானது’ எனச் சொல்லியிருக்கிறீர்கள்.

ஆளுநர் அவர்களே, தமிழ் எங்கள் இனம்! அது எங்கள் உயிர்மூச்சு! தமிழ்மொழியைக் காக்க உயிர்களை நெருப்புக்குக் கொடுத்தவர்கள் தமிழர்கள். முதல் அரசியலமைப்புச் சட்டத்திருத்தத்திற்கு அடிகோலியதோடு, இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்தின் வரலாறுகளைத் தாங்கி நிற்கும் மண் இது. இந்த மண்ணின் தாய்மொழிப் பற்றினை இனவாதம் என்றால் அது எங்களுக்குப் பெருமைதான்!” என்று ஆளுநரின் பதிலிக்கு பதிலடி கொடுத்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் முதல்வர் ஸ்டாலின்.