சென்னை: வங்கக்கடலில் மீண்டும் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் சென்னை உள்படப ல மாவட்டங்களில் பரவலாக மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய நாள் முதல் தொடர்ந்து சென்னை உள்பட பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.  மேலும்,  வட தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்றி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தின் ஒருசில இடங்களில் இன்று இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது.

இதன் காரணமாக  சென்னை உள்பட பல பகுதிகளில்  இன்று அதிகாலை முதல் லேசான மழை பெய்து வருகிறது.

இநத் நிலையில்,  இ  வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,  சென்னை உள்பட 7 மாவட்டங்களில்  இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.  அதன்படி,  சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது  என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும்,  வங்கக்கடலில் மீண்டும் புதிய  காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் வாய்ப்பு உள்ளது. இது  வரும் 22-ந்தேதி இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்துள்ளதுடன்,  காற்றழுத்த தாழ்வு பகுதி உருவான பிறகு,  அது வடமேற்கு திசையில் நகர்ந்து மேலும் வலுவடையும் என்று எதிர்பார்க்கப்படுவதாக தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில், “வரும் அக்டோபர் 20 ஆம் தேதி வடக்கு அந்தமான் கடற்பகுதியில் ஒரு புதிய மேல் அடுக்கு காற்று சுழற்சி உருவாக வாய்ப்புள்ளது. அதன் தாக்கத்தால், மத்திய வங்கக்கடலில் அக்டோபர் 22-ம் தேதியன்று குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஒன்று உருவாக வாய்ப்புள்ளது. அதன்பின், அது வடமேற்கு நோக்கி நகர்ந்து மேலும் வலுப்பெற வாய்ப்புள்ளது” என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனால் கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் கணித்துள்ளது. வடகிழக்குப் பருவமழையால் அடுத்தடுத்து காற்றழுத்த தாழ்வுப் பகுதிகள் உருவாகலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.