சென்னை: மனித உரிமை ஆணையத்தில் சரண்டர் ஆன சென்னை போலீஸ் கமிஷனர் அருண். தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்து உள்ளார்.
ரவுடிகளுக்கு அவர்கள் மொழியில் பாடம் கற்பிக்கப்படும் என்ற மிரட்டிய சென்னை காவல்ஆணையரின் பேச்சு சர்ச்சையான நிலையில், இதுதொடர்பாக விளக்கம் அளிக்க மனித உரிமை ஆணையம் சென்னை காவல் ஆணையர் அருணுக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இதற்கு பதில் தெரிவித்துள்ள அருண் ஐபிஎஸ், தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவிப்பதாக கூறியுள்ளார்.

ரவுடிகளுக்கு புரியும் மொழியில் பாடம் கற்பிக்கப்படும் என கூறிய விவகாரத்தில் மாநில மனித உரிமை ஆணையத்தில் வருத்தம் கோரி சென்னை போலீஸ் கமிஷனர் அருண் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
முன்னதாக, சென்னை புதிய கமிஷனராக அருண் ஐபிஎஸ் பதவி ஏற்றதும், அவர் அளித்த பேட்டியில் முதலில் ரவுடிகளை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை எடுப்போம். ரவுடிகளுக்கு புரியும் மொழியில் அவர்களுக்கு பாடம் கற்பிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார்.
இதைத்தொடர்ந்து ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட இரண்டு நபர்கள் என்கவுண்டர் செய்யப்பட்டனர். மேலும், சென்னை திருவொற்றியூரில் திருந்தி வாழும் ரவுடி ஒருவரின் வீட்டிற்குச் சென்ற உதவி ஆணையர் இளங்கோவன், அந்த ரவுடியின் மனைவியிடம், உங்கள் கணவர் கத்தியை எடுத்தால் என்கவுன்ட்டர்தான் என எச்சரித்தார். இது தொடர்பான வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த சம்பவங்கள் குறித்து மாநில மனித உரிமை கமிஷன் தானாக முன் வந்து விசாரணை நடத்தியது. அதன்படி, , உதவி கமிஷனர் இளங்கோவன், அவருடன் சென்ற போலீஸார் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக அக்டோபர் 14 ஆம் தேதி கமிஷனர் அருண் ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பப்பட்டது. இந்த வழக்கில், உதவி கமிஷனர் இளங்கோவன் நேரில் ஆஜராகி வருத்தம் தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் சார்பில் கூடுதல் வழக்கறிஞர் ஜெனரல் ரவீந்திரன் ஆஜரானார். நேற்றைய தினம் அந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது அருண் சார்பில் மூத்த வழக்கறிஞர் வில்சன் ஆஜரானார். அப்போது, காவல் ஆணையர் அருண் தரப்பில் மனு அளிக்கப்பட்டது. அதில், தனது பேச்சுக்கு சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் வருத்தம் தெரிவித்து உள்ளார்.
[youtube-feed feed=1]நேரில் ஆஜராக வேண்டும்: சென்னை காவல் ஆணையருக்கு மனித உரிமை ஆணையம் சம்மன்!