சென்னை

டிகர் விஜய்யின் த வெ க மாநாட்டுக்கு செல்ல விரும்புவதாக நடிகர் ஜீவா கூறியுள்ளார்.

நேற்று கே.ஜி பாலசுப்ரமணி இயக்கத்தில் நடிகர்கள் ஜீவா, பிரியா பவானி சங்கர் நடித்துள்ள ‘பிளாக்’ திரைப்படத்தின், நன்றி தெரிவிக்கும் விழா சென்னை வடபழனியில் உள்ள பிரசாத் லேபில் நடைபெற்றது. விழாவில் நடிகர் ஜீவா, இசையமைப்பாளர் சாம் சி எஸ், விவேக் பிரசன்னா, இயக்குனர் கேஜி பாலசுப்ரமணி, எடிட்டர் பிலோமின் ராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

நடிகர் ஜீவா அப்போது செய்தியாளர்களிடம்,

”நாங்கள் கைதட்டலுக்காக ஏங்கக்கூடிய ஜாதி. அதற்காக தான் இது மாதிரியான படங்களை தேர்வு செய்கின்றோம். எப்படி இருந்தாலும் அதிக திரையரங்குகளில் வேட்டையன் திரைப்படம் தான் வெளியாகியிருக்கும். அதேபோல் மற்ற திரைப்படங்களோடு வெளிவந்திருந்தாலும் குறைந்த அளவு திரையரங்குகள் தான் இந்த படத்திற்கு கிடைத்திருக்கும்.

இந்த திரைப்படம் 8 மாதங்களுக்கு முன்பே வெளியாக கூடிய படம். அதற்கான சூழ்நிலை
ஏற்படவில்லை என்பதால் தள்ளிப் போனது. எஸ்எம்எஸ் போன்ற படங்களை பண்ண வேண்டும் என்றால் அதில் நிச்சயமாக சந்தானம் இருக்க வேண்டும். விஜய் 69க்கு பிறகு என்ன பண்ண போறாருன்னு தெரியல.? விஜய் தொடர்ந்து படம் பண்ணினால் அது நூறாவது படமாக அமைவதற்கு கூட வாய்ப்பு இருக்கிறது.

தவெக மாநாட்டிற்கு செல்ல நான் விரும்புகிறேன்.  எனக்கு அந்த வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் போவேன்.

இந்த படத்தில் நடிகர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல், கதைக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளார்கள். இதே கதையை எங்கள் தயாரிப்பு நிறுவனமான சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பில் எடுத்திருந்தால், என் அப்பா என்னடா இது ரீல திருப்பி போட்ட மாதிரி இருக்கின்றது என கமெண்ட் செய்திருப்பார்.

ராம், கற்றது தமிழ் போன்ற படங்கள் வெளியான காலங்களில் எனக்கு அந்தளவிற்கு பெயர்கள் இல்லை. ராம் திரைப்படம் திரையரங்கில் வெளியாகியிருந்த பொழுது ஷோ கேன்சல் ஆகி மொக்கையெல்லாம் வாங்கி இருக்கின்றோம். அப்போதெல்லாம் ராம், கற்றது தமிழ் போன்ற படங்களை தயாரிக்க யோசித்தார்கள்.

ஆனால் தற்பொழுது அது ஈசியாக நடக்கிறது. படத்தை பார்ப்பவர்கள் யோசிக்கின்ற அளவிற்கு இவர்கள் கதை எழுதியுள்ளார்கள். நிறைய பேர் பிளாக் 2 எப்போது வரும் என கேட்கிறார்கள். நிச்சயமாக பார்ட் 2 எடுத்து தான் ஆக வேண்டும். ஏனென்றால் இரண்டு படங்களுக்கு தான் ஒப்பந்தம் போடப்பட்டிருக்கின்றது.

நல்ல ஒரு படக் குழுவினருடன் நடித்துள்ள மனதிருப்தி எனக்கு இருக்கிறது. இந்த
படத்தில் நன்றாக நடித்துள்ளீர்கள் என்று சொல்கிறார்கள். ஆனால் இதில் சாதாரணமாக
தான் நடித்திருக்கிறேன். இதற்காக பாராட்டுக்கள் வரும் பொழுது மகிழ்ச்சியாக
இருக்கிறது”

என்று தெரிவித்துள்ளார்