சென்னை: சென்னையில் மழை பெய்து வரும் நிலையில், கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து ரிப்பன் கட்டட வளாகம் மற்றும் கட்டுப்பாட்டு மையத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து நேற்று நள்ளிரவு துணைமுதல்வர் உதயநிதி பல்வேறு பகுதிகளுக்கு சென்று ஆய்வு நடத்திய நிலையில், இன்று காலை கொட்டும் மழையில் மீண்டும் ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார்.
ரிப்பன் கட்டட வளாகத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்து வருகிறார். சென்னை ரிப்பன் மாளிகையில் உள்ள கட்டுப்பாட்டு மையத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஆய்வு மேற்கொண்டுள்ளார். சென்னையில் எங்கெங்கு எவ்வளவு மழை பெய்தது? பாதிப்புகளை சரிசெய்ய எடுக்கப்பட்ட நடவடிக்கை பற்றி ஆய்வு செய்ததார்.
சென்னை, சேப்பாக்கத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் சென்னை எழிலகத்தில் இயங்கும் மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தை நேரில் ஆய்வு செய்தார் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின். பருவமழை காலத்தை எதிர்கொள்ள செய்யப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளபதிவில், முதலமைச்சர் ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறோம். இதன் ஒரு பகுதியாக, மழைநீர் தேங்காமல் இருக்க #ChepaukTriplicane தொகுதி, மயிலை முசிறி சுப்பிரமணியம் சாலையில் மேற்கொள்ளப்பட்டு வருகிற பணிகளை மாநகராட்சி அதிகாரிகளுடன் ஆய்வு செய்தோம்.
மேலும், கன மழை முன்னெச்சரிக்கைப் பணியில் ஈடுபட்டு வரும் பணியாளர்களை நேரில் சந்தித்து அவர்களுக்கு சிற்றுண்டிகளை வழங்கினோம். அங்கு நடைபெறும் பணிகளுக்கு, இடையூறு ஏற்படாத வகையில் மழைநீரை விரைவாக அகற்றிடுமாறுக் கேட்டுக் கொண்டோம் என குறிப்பிட்டுள்ளார்.