சென்னை: சென்னையில் பெய்து வரும் கனமழை காரணமாக, , போதிய பயணிகள் இல்லாததால் சென்னையில் இன்று 8 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டு உள்ளது.
சென்னை கனமழையின் போது விமான சேவைகளை நிர்வகிப்பது குறித்து சிறப்பு கூட்டம் சென்னை விமான நிலையத்தில் நடந்தது. இதில், கனமழையின் போது விமான சேவைகளை நிர்வகிப்பது குறித்து விவாதிக்கப்பட்டது. இருந்தாலும் நேற்று (அக் 15) அன்று எந்தவொரு விமான சேவைகளும் , ரத்து செய்யப்படவில்லை, ஆனால் பல விமானங்கள் தாமதமாகிவிட்டதாக AAI தெரிவித்துள்ளது. மழை காரணமாக சாமான்கள் மற்றும் பிற பொருட்களை சரியான நேரத்தில் விமானத்தில் ஏற்ற முடியவில்லை என்று கூறப்பட்டது.
இதைத்தொடர்ந்து, ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள சென்னையில், இன்றும் நாளையும் (செவ்வாய் மற்றும் புதன்கிழமை) வழக்கமான அட்டவணை பின்பற்றப்படும் என்று விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.
மழை காரணமாக “விமானங்கள் பொதுவாக இயங்கும் என்று கூறப்பட்டதுடன், , ஆனால் காற்றின் வேகம் மாறினால், தாமதங்கள் மற்றும் ரத்து செய்யப்படும்” என்று தெரிவிக்கப்பட்டது. மலும், மழையில் பயணம் செய்வதைத் தவிர்க்கும் வகையில், ரத்து மற்றும் தாமதம் குறித்து பயணிகளுக்குத் தெரிவிக்குமாறு ஏஏஐ விமான நிறுவனங்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
மேலும், விமான நிலையத்தில் குழப்பத்தைத் தவிர்க்க பயணிகளும் தங்கள் வீடுகளில் இருந்து புறப்படுவதற்கு முன் விமான நிறுவனத்தைத் தொடர்புகொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள் என்றும், விமானச் செயல்பாடுகள் சீராக இருக்கும் வகையில் ஓடுபாதையில் வெள்ளப்பெருக்கு ஏற்படாமல் தடுக்கவும் விமான இயக்ககம் நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறப்பட்டது.
இந்த நிலையில், நள்ளிரவு முதல் பெய்து வரும் மழை மற்றும் சாலையில் தேங்கியுள்ள தண்ணீரால், இன்று விமானங்களில் பயணம் செய்ய முன்பதிவு செய்திருந்த பலர் தங்களது விமான பயணத்தை ரத்து செய்துள்ளனர். இதனால் 8 விமான சேவைகள் ரத்து செய்யப்படுவதாக சென்னை விமான நிலையம் அறிவித்து உள்ளது.
அதன்படி, பெங்களூரு, அந்தமான், டெல்லி, மஸ்கட் ஆகிய இடங்களுக்கு இயக்கப்படும் 8 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
சென்னை விமான நிலையத்தில் கூட்டம் குறைவாகவே உள்ளது. விமானங்கள் புறப்பாடு மாற்றியமை வாய்ப்புள்ளதால் அதற்கேற்றார்போல பயணிகள் திட்டமிட்டு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.