சென்னை:  வங்கக்கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியர்ல் சென்னை மற்றும் தமிழ்நாட்டின் பிற பகுதிகளில் கனமழை பெய்து வரும் நிலையில், அடுத்த புயல் உருவாகிறது என்றும், இதன் காரணமாக மதுரை சிவகங்கை மாவட்டங்களில் கனமழை பெய்ய  வாய்ப்பு உள்ளதாக என  தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்திய வானிலை ஆய்வு மையம் தவெளியிட்ட அறிவிக்கையில், தமிழ்நாட்டின் கடலோர மற்றும் வட மாவட்டங்களில் 14.10.2024 முதல் 17.10.2024 வரை கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளது. மேலும், சென்னை உள்பட அண்டைய மாவட்டகளில் 15ந்தி  அன்று 20 செமீ மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும்,   17.10.2024 வரை மொத்தம் சுமார் 40 செ.மீ. வரை மழை பெய்யக்கூடும் என்று அறிவித்துள்ளது.

இதையடுத்து இன்று சென்னை உள்பட 6 மாவட்டங்களில்  விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.  நள்ளிரவு முதல் மழையும் பெய்து வருகிறது. இந்த நிலையில்,  சென்னை மற்றும் தமிழ்நாட்டின் பிற பகுதிகளில் பெய்ய உள்ள மழை தொடர்பாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அதன்படி, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் பகுதிகளில் நள்ளிரவு முதல் கனமழை பெய்து உள்ளது. அடுத்த கட்டமாக மழை மேகங்கள் சென்னையை நோக்கி நகர தொடங்கி உள்ளன. பாண்டி மற்றும் கடலூரில் இருந்து மேகங்கள் மெல்ல நகர்ந்து வருகின்றன.  இன்று முழுக்க இதேபோல் இன்னும் பல மழை மேகங்கள் வந்த வண்ணமும், போன வண்ணமும் இருக்கும்.

நாளை வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி வட தமிழ்நாட்டிற்கு நெருக்கமாக.. சென்னைக்கு மிக அருகே வரும் வாய்ப்புகள் உள்ளன

கோயம்புத்தூரில் வழக்கமாக மாலையில் மழை பெய்து கொண்டிருந்தது, இது கோயம்புத்தூரில் அதிக மழை பெய்யும் மாதங்களில் ஒன்றாகும்.
மதுரை – சிவகங்கை பெல்ட்டில் மீண்டும் புயல் உருவாகிறது என்று எச்சரித்து உள்ளார்.