விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு நாளை விடுமுறை விடப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த காற்றழுத்த தாழ்வு நிலை ஒரே இடத்தில் நீடித்து வரும் நிலையில் நாளை முதல் தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்யும் என்று கூறப்பட்டுள்ளது.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களில் மழையின் தீவிரம் அதிகமாக இருக்கும் என்றும் இந்த மாவட்டங்களில் அதிகனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.
இதனால் நாளை இந்த நான்கு மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தவிர, ஐ.டி. நிறுவனங்கள் அக். 17ம் தேதி வரை தங்கள் ஊழியர்களை வீட்டில் இருந்தபடி வேலை செய்ய தேவையான நடவடிக்கை எடுக்க தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
இந்த நிலையில் வடகிழக்கு பருவமழை காரணமாக விழுப்புரம் மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அளிக்க அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.