டெல்லி காவல்துறை மற்றும் குஜராத் காவல்துறை இணைந்து நடத்திய கூட்டு நடவடிக்கையில் ஞாயிற்றுக்கிழமை குஜராத்தின் அங்கலேஷ்வரில் ரூ.5,000 கோடி மதிப்புள்ள 518 கிலோ கோகோயின் பறிமுதல் செய்யப்பட்டது.

இதன் மூலம், டெல்லி மற்றும் குஜராத்தில் பதினைந்து நாட்களுக்குள் 13,000 கோடி ரூபாய் மதிப்புள்ள 1,289 கிலோகிராம் கோகோயின் மற்றும் 40 கிலோகிராம் ஹைட்ரோபோனிக் தாய்லாந்து மரிஜுவானா சட்ட அமலாக்க அமைப்புகளால் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தில்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவு மற்றும் குஜராத் காவல்துறை ஞாயிற்றுக்கிழமை அங்கலேஷ்வரில் உள்ள மருந்து நிறுவனத்தில் நடத்திய சோதனையில் 518 கிலோகிராம் கோகோயின் மீட்கப்பட்டதாகக் கூறினர்.

கைப்பற்றப்பட்ட கொக்கைன் போதைப்பொருளின் சர்வதேச சந்தையில் மதிப்பு சுமார் 5,000 கோடி ரூபாயாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

அக்டோபர் 1 ஆம் தேதி, டெல்லியின் மஹிபால்பூரில் உள்ள ஒரு கிடங்கில் சிறப்புப் பிரிவு சோதனை நடத்தியது அதில் 562 கிலோகிராம் கோகோயின் மற்றும் 40 கிலோகிராம் ஹைட்ரோபோனிக் மரிஜுவானாவைக் கைப்பற்றியது.

விசாரணையின் போது, ​​அக்டோபர் 10 ஆம் தேதி, டெல்லியில் உள்ள ரமேஷ் நகரில் உள்ள ஒரு கடையில் இருந்து சுமார் 208 கிலோகிராம் கூடுதல் கோகோயின் மீட்கப்பட்டது. அந்த மருந்துகள் அங்கலேஷ்வரில் உள்ள மருந்து நிறுவனத்திடம் இருந்து பெறப்பட்ட ஒரு நிறுவனத்திற்கு சொந்தமானது என்று போலீசார் கண்டறிந்தனர்.

இந்த வழக்கு தொடர்பாக சர்வதேச போதைப் பொருள் கடத்தல் கும்பலைச் சேர்ந்த சிலை கைது செய்யப்பட்டுள்ள நிலையில் முக்கிய குற்றவாளிகளை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

டெல்லியில் 10 நாளில் ரூ. 9000 கோடி மதிப்புள்ள போதைப் பொருள் பிடிபட்டது… சர்வதேசபோதைப் பொருள் கடத்தல் கும்பலைச் சேர்ந்த 2 பேர் கைது…