சென்னை: சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் வரும் 16ம் தேதி அதி கனமழை பெய்யும் என்றும் அன்றைய தினம்,  20 செ.மீ., மழை பெய்யும் என  சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழகத்தின் உள் பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் அடுத்த 7 தினங்களுக்கு மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்திய பகுதியில் இருந்து தெற்மேற்கு பருவமழை விலக உள்ள நிலையில், தென்னிந்திய பகுதிகளில் 15 மற்றும் 16 ஆம் தேதிகளில் வடகிழக்கு பருவ மழை துவங்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. மேலும் கடந்த ஆண்டை விட இந்தாண்டு மழையின் அளவு அதிகமாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

வங்கக்கடலில்  உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி  காரணமாக,  வடதமிழ்நாட்டு உள்பட கடலோர மாவட்டங்களில்  மிக கன மழைக்கான எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. குறிப்பாக சென்னையில் மிக கனமழை பெய்வதற்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டு உள்ளது. வரும் 16ந்தேதி ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம்  வெளியிட்டுள்ள   செய்திக் குறிப்பில், தமிழக உள் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்கிழக்கு வங்கக்கடலில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதன் காரணமாக இன்று பல மாவட்டங்களில்  மிதமானது முதல் கனமழை பெய்யும் வாய்ப்பு உள்ளது.

தமிழகத்தின் உள் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சியும், தென்கிழக்கு வங்கக்கடலில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சியும் நிலவுகின்றன. இதன் காரணமாக, தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதியில் 14ம் தேதி (இன்று) ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக் கூடும். இது மேற்கு, வடமேற்குதிசை யில் நகர்ந்து, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்து, அதன் பின்னர் 48 மணி நேரத்தில் வட தமிழகம், தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளை நோக்கி நகரக்கூடும்.

தமிழகத்தில் இன்று முதல் 16-ம் தேதி வரை பெரும்பாலான இடங்களி லும், 17, 18, 19-ம் தேதிகளில் ஒருசில இடங்களிலும் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

14ம் தேதி (இன்று) தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயி லாடுதுறை ஆகிய டெல்டா மாவட் டங்கள், விழுப்புரம், கடலூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை கனமழையும் பெய்யக்கூடும். மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக் கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திரு வண்ணாமலை, கள்ளக்குறிச்சி, திருச்சி, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.

15-ம் தேதி (நாளை) சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல் பட்டு, ராணிப்பேட்டை, திருவண்ணா மலை, கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட் டங்கள், புதுச்சேரியில் ஓரிரு இடங் களில் கன முதல் மிக கனமழையும், வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், ஈரோடு, அரியலூர், பெரம்பலூர், டெல்டா மாவட்டங்கள், காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.

16.10.2024 (நாளை மறுதினம்): சென்னை உள்பட வட தமிழகத்தின் பெரும்பாலான இடங்களிலும், தென் தமிழகத்தின் ஒரிரு இடங்களிலும் மற்றும், புதுவை காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் கனமழை பெய்யும்.  சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டடங்களில்  ஓரிரு இடங்களில் கனமழை முதல் அதிகனமழை பெய்யும்.  இராணிப்பேட்டை, திருவண்ணாமலை, மகாபலிபுரம் , புதுச்சேரி உள்பட பல பகுதிகளில் கனமழையும்,  கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், கள்ளக்குற்றிச்சி மற்றும் கடலோர மாவட்டடங்களில் கனமழை பெய்யும் வாய்ப்பு உள்ளது.

சென்னையில் 16-ம் தேதி அதிகனமழை எச்சரிக்கை: வங்கக்கடலில் இன்று உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி, அடுத்தடுத்த நாட்களில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்து, வட தமிழகம், தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளை நோக்கி நகரக்கூடும். இதன் காரணமாக, 16-ம் தேதி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழை முதல் அதிகனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்கள், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், வேலூர், திருப்பத்தூர், கிருஷணகிரி, தருமபுரி, சேலம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் களமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் மிதமான அல்லது கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையத்தின் தலைவர் பாலசந்திரன் கூறினார்.

17-ம் தேதி திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமுதல் மிக கனமழையும், சென்னை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, தருமபுரி, சேலம், ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.

நேற்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக மதுரையில் 16 செ.மீ. சிவகங்கை மாவட்டம் திருப்பு வனத்தில் 14 செ.மீ., விருதுநகர் மாவட்டம் சிவகாசி, மதுரை தல்லாகுளம், பெரியபட்டி, தஞ்சாவூர் மாவட்டம் வெட்டிக்காடு, ராமநாதபுரம் மாவட் டம் ராமேசுவரத்தில் 12 செ.மீ., மதுரை வடக்கில் 11 செ.மீ., விருதுநகர் மாவட்டம் கோவிலங்குளம், அருப்புக் கோட்டை, திருச்சி மாவட்டம் பொன்னையார் அணை, மதுரை மாவட்டம் தானியமங்கலம், மேட்டுப்பட்டியில் 10 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. தமிழக கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக் கடல் பகுதிகளில் 14, 15-ம் தேதிகளில் அதிகபட்சமாக 55 கி.மீ. வேகத்திலும், 16, 17-ம் தேதிகளில் தென் தமிழக கடலோர பகுதிகள், மன்னார் வளை குடா, குமரிக்கடல் பகுதிகளில் 55 கி.மீ. வேகத்திலும், வட தமிழக கடலோர பகுதிகளில் 65 கி.மீ. வேகத்திலும் சூறாவளி காற்று வீசக்கூடும். எனவே, இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம். இவ்வாறு அவர் கூறினார்.

தமிழகத்தில்  இன்று  (அக்.14) அநேக இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், அக்டோபர் 15ம் தேதி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும். அக்டோபர் 16ம் தேதி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் மிக கனமழை முதல் அதி கனமழை (204.மி.மீ) பெய்யக்கூடும்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதனிடையே நிருபர்களிடம் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரன் கூறியதாவது; சென்னையில் இன்று முதல் படிப்படியாக மழை அதிகரித்து பெய்யத் தொடங்கும். நாளை மறுநாள் மிக கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது. தென்மேற்கு பருவமழை விலகி, வரும் 15 மற்றும் 16ம் தேதி வட கிழக்கு பருவமழை தொடங்குவதற்கான சாதகமான சூழல் உள்ளது. இம்முறை 5 நாட்களுக்கு முன்னதாகவே வட கிழக்கு பருவமழை தொடங்குகிறது.அரபிக்கடல், வங்கக்கடலில் உள்ள 2 நிகழ்வுகளால் கனமழை தொடரும். மழை தொடர்பான அனைத்து தகவல்களும் அரசுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அரசு அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.