சென்னை: நடப்பு கல்வியாண்டுக்கான 10, 11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேதிகள் எப்போது வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
நாடு முழுவதும் இன்று விஜயதசதி கொண்டாடப்பட்டு வரும் நிலையில், இன்றைய நாளில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடத்த உத்தரவிட்டுள்ள திமுக அரசு, தற்போது இன்றைய நாளில் நடப்பு கல்வியாண்டுக்கான 10, 11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேதிகள் வெளியீடு தொடர்பான அறிவிப்பையும் வெளியிட்டு உள்ளது.
அதன்படி, 2024- 25ஆம் கல்வி ஆண்டுக்கான 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை அக்டோபர் 14ஆம் அதேதி அன்று (வெள்ளிக்கிழமை) வெளியிடப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அன்றைய தினம் கோவையில் இருந்து பொதுத் தேர்வு அட்டவணையை அமைச்சர் அன்பில் வெளியிட இருப்பதாக தெரிவிக்கப்பட்ட உள்ளது.
கடந்த 2023- 24ஆம் கல்வி ஆண்டுக்கான 12ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் 1-ம் தேதி தொடங்கி மார்ச் 22ஆம் தேதியுடன் முடிந்தது. . அதேபோல 11ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு மார்ச் 4-ல் தொடங்கிய நிலையில், மார்ச் 25ஆம் தேதியோடு நிறைவடைந்தது. தொடர்ந்து 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 26 தொடங்கி ஏப்ரல் 8-ம் தேதி வரை நடைபெற்றது.
இந்த நிலையில் 2024- 25ஆம் கல்வி ஆண்டுக்கான 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை அக்டோபர் 14ஆம் அதேதி அன்று (வெள்ளிக்கிழமை) வெளியிடப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
முன்னதாக திருத்தி அமைக்கப்பட்ட நாட்காட்டியை பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டது. இதன்படி இரண்டு நாட்களைத் தவிர மீதமுள்ள சனிக்கிழமைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.