டெல்லி: தமிழ்நாட்டில் நீதித்துறை உள்கட்டமைப்பை வலுப்படுத்த   ரூ.61.27 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக  மத்திய சட்ட அமைச்சர்  அர்ஜுன் ராம் மேக்வால்  தெரிவித்து உள்ளார்.

மத்திய அரசின் நிதியுதவி திட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் நீதித்துறை உள்கட்டமைப்பை வலுப்படுத்தவும், மாநிலத்தில் நீதி வழங்கல் முறையை மேம்படுத்தவும் 61.27 கோடி ரூபாய் விடுவிக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு உட்பட பல்வேறு மாநிலங்களுக்கு நிதி பகிர்வாக மத்திய நிதியமைச்சகம்  ரூ.1,78,173 கோடியை  விடுவித்தது.  பண்டிகை காலம் என்பதால்,  அக்டோபர் மாதம் வழங்க வேண்டிய தொகையுடன்  பண்டிகைக் காலத்தைக் கருத்தில் கொண்டும், மாநிலங்கள் மூலதனச் செலவினங்களை விரைவுபடுத்துவதற்கும், அவற்றின் வளர்ச்சி மற்றும் நலன் சார்ந்த செலவினங்களுக்கு நிதியளிக்கும் வகையிலும்  மத்திய அரசு விடுவித்தது. அதாவது கூடுதல் தவணையாக முன் கூட்டியே ரூ.89,086.50 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது.  இதில்,  தமிழ்நாட்டின் பங்காக ரூ.7,268 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், மத்திய அரசின் நிதியுதவி திட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் நீதித்துறைக்கு ரூ.61.27 கோடி விடுவிக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,   “மத்திய அரசின் நிதியுதவி திட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் நீதித்துறை உள்கட்டமைப்பை வலுப்படுத்தவும், மாநிலத்தில் நீதி வழங்கல் முறையை மேம்படுத்தவும் 61.27 கோடி ரூபாய் விடுவிக்கப்பட்டுள்ளது.” என குறிப்பிட்டுள்ளார்.