சென்னை: சென்னையின் பல பகுதிகளில் நேற்று இரவு மிதமான மழை பெய்த நிலையில், இன்று அதிகாலை முதல் பல பகுதிகளில் மழை வெளுத்து வாங்கி வருகிறது.
இதற்கிடையில், தமிழ்நாடு முழுவதும் – ஒரு வாரம் நல்ல மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், 15ந்தேதி அதிகனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. அதாவது. வரும், 15ம் தேதி, சென்னை உள்ளிட்ட ஒன்பது மாவட்டங்களில், மிக கனமழைக்கான, ‘ஆரஞ்ச்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மத்திய கிழக்கு அரபிக்கடல், கர்நாடகா – கோவா கடற்கரை பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, வட-மேற்கு திசையில் நகர்ந்து, மஹாராஷ்டிரா கடற்கரை பகுதியில் நிலை கொண்டுள்ளது.இது மேலும் வலுப்பெற்று, மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து, நாளை காலை, மத்திய அரபிக்கடல் பகுதியில் காற்ற-ழுத்த தாழ்வு மண்டலமாக நிலவும். தென் தமிழகம் மற்றும் தெற்கு வங்கக் கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழ-டுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதன் காரணமாக, தமிழகத்தில் பெரும்பாலான இடங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் இன்று, இடி, மின்னலுடன் லேசான மழை பெய்யக்கூடும். சேலம், கரூரில்…திருப்பூர், கோவை, நீலகிரி, திண்டுக்கல், ஈரோடு, நாமக்கல், சேலம், கரூர் மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்பு உள்ளது என, என, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும் இன்று (12ந் தேதி மற்றும் 13, 16-ந்தேதிகளில் கனமழை பெய்யும் எனவும் கூறியது.
இந்த நிலையில், நேற்று முதல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இன்று அதிகாலை முதல் சென்னையின் பல பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் நிலையில், சென்னையின் பல இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்து வருகிறது.
சென்னையில் பல்வேறு பகுதிகளில் இரவு முதலே மிதமான மழை பெய்தது. மேலும், இன்று காலை 5 மணி முதல் கனமழை கொட்டி வருகிறது. சென்னை செங்குன்றம், கோயம்பேடு, மாதவரம், திருவொற்றியூர், பாரிமுனை, எழும்பூர், ராயப்பேட்டை, திருவல்லிக்கேணி, சேப்பாக்கம், எழும்பூர், கீழ்பாக்கம் , கிண்டி , தாம்பரம், கேளரம்பாக்கம் உள்பட பல பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் தண்ணீர் தேங்கி காணப்படுகிறது.
இதற்கிடையில், நாளை 13ம் தேதி சென்னை மட்டுமின்றி, திருப்பூர், கோவை, நீலகிரி, திண்டுக்கல், ஈரோடு, கரூர் மாவட்-டங்களில், நாளை கனமழைபெய்ய வாய்ப்புள்ள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
நாளை மறுதினம், 14ம்தேதி விழுப்புரம், கடலுார், மயிலாடு-துறை, நாகப்பட்டினம், காரைக்கால், புதுச்சேரியில் கனமழை முதல் மிக கனமழையும் பெய்யக்கூடும். தஞ்சாவூர், திருவாரூர், செங்கல்பட்டு, திருவள்ளூர், சென்னை, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, அரியலுார், புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
15ந்தேதி ஆரஞ்ச் அலர்ட்
15ம் தேதி மிக கனமழை பெய்-யக்கூடும் என்றும், திருப்பத்துார், திருவண்ணாமலை, விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலுார், ராணிப்பேட்டை, திருவள்ளூர், சென்னை ஆகிய ஒன்பது மாவட்டங்களில், 12 முதல் 20 செ.மீ., வரை மழை பெய்யும் என்பதால், ‘ஆரஞ்ச்’ அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
கடலுார், கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, மயிலாடுதுறை மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் அறிவிக்-கப்பட்டுள்ளது.
மழை முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நாட்-களில், மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும், வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.