சென்னை

ன்று சென்னை பெசண்ட் நகர் மயானத்தில் முரசொலி செல்வம் உடல் தகனம் செய்யப்பட உள்ளது.

கடந்த வியாழன் அன்று பெங்களூரில் முரசொலி நாளிதழின் முன்னாள் ஆசிரியரும், எழுத்தாளருமான ‘முரசொலி’ செல்வம் (83), காலமானார். கோபாலபுரத்திலுள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதியின் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சா் துரைமுருகன், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சா்கள் நேரில் அஞ்சலி செலுத்தினா்.

1941-ஆம் ஆண்டு ஏப்ரலில் பிறந்துமுரசொலி நாளிதழில் ‘சிலந்தி’ எனும் பெயரில் விமா்சன கட்டுரைகளை எழுதி வந்த பன்னீா்செல்வம் என்ற ‘முரசொலி’ செல்வம், முன்னாள் முதல்வரான கருணாநிதியின் சகோதரி மகனாவார், இவர் மேகலா பிக்சா்ஸ், அஞ்சுகம் பிக்சா்ஸ், பூம்புகார் புரொடக்ஷன்ஸ் ஆகிய திரைப்பட தயாரிப்பு நிறுவனங்களின் நிர்வாகப் பொறுப்பில் இருந்தார்..

பெங்களூரில் உள்ள தனது வீட்டில் 83 வயதான முரசொலி செல்வம் வசித்து வந்தார். கருணாநிதி) மகளான செல்வியை திருமணம் செய்து கொண்டு அவா்களுக்கு எழிலரசி என்ற மகள் உள்ளார். ‘முரசொலி’ செல்வத்தின் உடல் சாலை மாா்க்கமாக, சென்னையில் உள்ள கோபாலபுரம் இல்லத்துக்கு வியாழக்கிழமை மாலை 5.45 மணியளவில் கொண்டு வரப்பட்டது.

அங்கு செல்வத்தின் உடலுக்கு முதல்வர் மு க ஸ்டாலின், அமைச்சா் துரைமுருகன், துணை முதல்வரும், செல்வத்தின் மருமகனுமான உதயநிதி ஸ்டாலின், திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவா் கனிமொழி ஆகியோா் கண்ணீா் மல்க அஞ்சலி செலுத்தினா். இன்று ’முரசொலி’ செல்வத்தின் இறுதி நிகழ்வுகள், சென்னை பெசன்ட் நகரிலுள்ள மயானத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது,