சென்னை: திமுகவின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான முரசொலியின் ஆசிரியர் முரசொலி செல்வம் காலமானார். அவருக்கு வயது 82.

தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் மருமகனும் முரசொலி மாறனின் சகோதரருமான முரசொலி செல்வம் இன்று (வியாழக்கிழமை) அதிகாலை காலமானார். தற்போது பெங்களூருவில் வசித்துவந்த அவர் உடல்நலப் பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்ற வந்த நிலையில், அவர் காலமானதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
மறைந்த முரசொலி செல்வத்தின் உடல் இன்று பிற்பகல் சென்னை கொண்டு வரப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Patrikai.com official YouTube Channel