2024ம் ஆண்டு வேதியியலுக்கான நோபல் பரிசு மூன்று விஞ்ஞானிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டுக்கான நோபல் பரிசு குறித்த அறிவிப்பு ஒவ்வொன்றாக வெளியாகி வருகிறது.

2024 ஆம் ஆண்டிற்கான வேதியியலுக்கான நோபல் பரிசை ராயல் ஸ்வீடிஷ் அகாடமி ஆஃப் சயின்சஸ் இன்று அறிவித்துள்ளது.

புரத வடிவமைப்பு, கட்டமைப்பு குறித்த ஆராய்ச்சிக்காக டேவிட் பேக்கர், டெமிஸ் ஹசாபிஸ் மற்றும் ஜான் எம். ஜம்பர் ஆகிய மூவருக்கு இந்த விருது வழங்கப்பட உள்ளது.

இதில் டேவிட் பேக்கருக்கு கணக்கீட்டு புரத வடிவமைப்பிற்காக இந்த விருது வழங்கப்படவுள்ளது. இது தவிர, டெமிஸ் ஹசாபிஸ் மற்றும் ஜான் எம். ஜம்பர் ஆகியோருக்கு புரத அமைப்புக் கணிப்புக்காக கூட்டாக இந்த விருது வழங்கப்படுகிறது.